10 October 2014

குச்சிகொளுத்தி ராமதாசுக்கு வன்முறையைக் கண்டிக்க அருகதை உண்டா?

சாத்தான் வேதம் ஓதுகிறது அல்லது ஓர் ஓநாய் வன்முறைக்கு எதிராக அகிம்சை பேசுகிறது என்றால் யாராவது நம்புவார்களா? அப்படிப் பேசிக்கொண்டிருக்கிறது இராமதாசு என்கிற ஓநாய். தான் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து வழி நெடுக வன்முறையின்மூலமும் அநாகரிகத்தின் உச்சத்தின்மூலமும் தமிழக அரசியலை மோசமான பாதைக்கு நகர்த்திச் சென்ற மிகப் பெரிய வன்முறையாளர் பா.ம.க. இராமதாசு, இப்போது அமைதியைப் பற்றியும் சட்டம்-ஒழுங்கைப் பற்றியும் பேசுகிறார். நாகரிகத்தைப் பற்றிப் பேசுகிறார். இதெல்லாம் தமிழக அரசியலுக்கு நேர்ந்த அவலம். 


சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வகையறாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனையொட்டி தமிழகம் முழுக்க அதிமுகவினரால் போராட்டங்களும் ஆங்காங்கே பேருந்து உடைப்புகளும் எரிப்புகளும் நடந்தேறின. இச்செயல்கள் ஏற்கக்கூடியவையல்ல. தொண்டர்களின் உணர்ச்சிப் பெருக்காலும், விசுவாசத்தைக் காட்டுவதற்காகவும் நடந்தேறிய செயல்கள். இவற்றை முன்வைத்துத்தான் பா.ம.க. இராமதாசு நாளொரு அறிக்கையின் மூலம் அதிமுகவை மிரட்டிக்கொண்டிருக்கிறார். வன்முறையின் ஒட்டுமொத்த உருவமான, அநாகரிகத்தின் மறு வடிவமான, பிற்போக்குத்தனத்தின் புதிய வடிவமான இராமதாசுக்கு வன்முறை குறித்தோ, அமைதி குறித்தோ பேசுவதற்கு எதாவது அருகதை உண்டா? அவருடைய கடந்த கால வன்முறை வெறியாட்டத்தின் பட்டியலைப் பார்த்தாலே அவரது யோக்கியதை புரியும்.

வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் செங்கல்வராயன் நாயக்கர் அறக்கட்டளையின் இயக்குநராகவும் இருந்தவர் ஏ.கே.நடராசன். பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்ட இந்த அறக்கட்டளையைக் கைப்பற்ற முயன்றார் இராமதாஸ். தனது மகள் கவிதாவின் சின்ன மாமனாரும் (சம்பந்தி) முன்னாள் டி.ஜி.பி.யுமான ராஜ்மோகன் என்பவரை அறக்கட்டளையின் தலைவராக்கச் சதித் திட்டம் போட்டார். விளைவு, 1996ஆம் ஆண்டு ஏ.கே.நடராசன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அவரை நையப் புடைத்து மாடியிலிருந்து தூக்கி எறிந்தனர். படுகாயம் அடைந்த ஏ.கே.நடராசன் மூன்று ஆண்டுகள் கோமாவில் இருந்தார். இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்ட கூலிப்படையினர் தப்பித்துக்கொள்ள, பொய் வழக்கில் அன்றைய பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகனும், அவரது குடும்பத்தினரும் பலிகடா ஆக்கப்பட்டனர்.

பா.ம.க.வில் தனித்துவமாக வளர்ந்த பேராசிரியர் தீரனை 1998ஆம் ஆண்டு இராமதாசு நீக்கினார். நீக்கப்பட்ட தீரன் ‘தமிழ் பா.ம.க.’ என்கிற கட்சியை உருவாக்கி ஊர் ஊராய் இராமதாசின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தினார். ஆத்திரமடைந்த இராமதாசு தமது கட்சியின் அப்பாவி இளைஞர்களைத் து£ண்டி விட்டதன் விளைவு, ஆண்டிமடத்திற்குப் போகும்போது இரும்புலிகுறிச்சி அருகே பேராசிரியர் தீரன் அவர்களின் காரை வழிமறித்து பெட்ரோல் குண்டுகளை வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலை முன்னின்று நடத்திய இரும்புலிகுறிச்சியின் பா.ம.க. பொறுப்பாளர் தமிழ்ஒளி வழக்குச் செலவுக்காக தைலாபுரம் தோட்டத்திற்கு அலைந்ததுதான் மிச்சம். நாயை விரட்டுவதுபோல் விரட்டியடித்தனர் இராமதாசு குடும்பத்தினர். “இராமதாசு என்னை நயவஞ்சகமாகத் து£ண்டிவிட்டார். அதற்கு நான் பலிகடா ஆகிவிட்டேன்” என்று பின்னாளில் பேராசிரியர் தீரனிடமே உதவி வேண்டி நின்றார் தமிழ் ஒளி.

1999ஆம் ஆண்டு வாழப்பாடி இராமமூர்த்தி அவர்கள் வன்னியர் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி வன்னிய மக்களுக்காகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்தார். இதனைப் பொறுத்துக்கொள்ளாத இராமதாசு அப்பாவி இளைஞர்களைத் தூண்டிவிட்டு விழுப்புரம் அருகே வாழப்பாடி இராமமூர்த்தியின் காரை வழிமறித்துத் தாக்குதல் நடத்தினார்கள். இதில் வாழப்பாடியார் தப்பித்தாலும் பலர் காயமடைந்தார்கள். ஆனாலும் வாழப்பாடி இராமமூர்த்தியின் மீதான வன்முறைத் தாக்குதல் அவர் மறையும் வரை நின்றபாடில்லை.

வன்னியர் சங்கத்தை உருவாக்கியதோடு, பா.ம.க. என்கிற அரசியல் கட்சியையும் உருவாக்க உறுதுணையாய் இருந்த பு.த.அருள்மொழி, பு.த.இளங்கோவன் ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல்..

பா.ம.க.விலிருந்து பண்ருட்டி இராமச்சந்திரன் விலகியவுடன் அவரது அசோக் நகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு..

முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீரவன்னியர் பேரவை நடத்திக்கொண்டிருக்கும்போது அப்பேரவையைக் கலைக்கும்படி மிரட்டினார் இராமதாசு. அதற்கு அஞ்சாத ஜெகத்ரட்சகன் தொடர்ந்து வன்னியர் பேரவை நடத்தி வந்தபோது ஜெகத்ரட்சகனின் சம்மந்தி டெல்டா நாராயணசாமியை குடும்பத்துடன் கடத்திக்கொண்டுபோய் மிரட்டியதன் விளைவாக வீரவன்னியர் பேரவை கலைக்கப்பட்டு அவரும் திமுகவில் போய்ச் சேர்ந்தார்.

இப்படி வன்முறை வெறியாட்டத்தின் மூலம் அரசியலைத் தொடர்ந்த இராமதாசு கொலைவெறியாட்டத்தையும் நிகழ்த்தியுள்ளார்.

பா.ம.க.விலிருந்து விலகிய பண்ருட்டி இராமச்சந்திரன் ‘மக்கள் நல உரிமைக் கழகம்’ ஒன்றைத் தொடங்கினார். பா.ம.க.விலிருந்து விலகி பலர் பண்ருட்டியாரின் கழகத்தில் இணைந்தனர். அப்படி இணைந்த கரவொலி கதிரவன் என்பவர் மிகத் தீவிரமாக இராமதாசின் சுயநல வெறியை மேடைகளிலும் துண்டறிக்கைகள் மூலமும் அம்பலப்படுத்தினார். மக்கள் நல உரிமைக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த கரவொலி கதிரவன் திடீரென லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். இராமதாசின் இயக்கத்தால் நடைபெற்ற இந்தக் கொலையை, பின்னாளில் விபத்து என்று வழக்கை முடித்தார்கள்.

அதிமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் திண்டிவனம் பகுதியில் இராமதாசு குடும்பத்தினருக்குப் பெரும் சவாலாயிருந்தார். இதைப் பொறுக்க முடியாத இராமதாசு சி.வி.சண்முகத்தைக் கொலை செய்ய பா.ம.க.வின் அப்பாவி இளைஞர்களைத் தூண்டிவிட்டார். இராமதாசின் நயவஞ்சகத்தைப் புரிந்துகொண்ட இளைஞர்கள் யாரும் இதற்கு உடன்படவில்லை. ஆனாலும் கொலைவெறி தலைக்கேறிய இராமதாசு தனது மனைவி சரஸ்வதியின் சகோதரர் இராமச்சந்திரனின் இளைய மகன் ரகுவை (புதுச்சேரி அனந்தராமனின் தம்பி) கொம்பு சீவிவிட்டார். “கட்சியில் உனக்குப் பெரிய இடம் இருக்கு. முக்கியப் பொறுப்புக்கு வரப்போகிறாய்” என்றெல்லாம் ஆசை வார்த்தை காட்டவே ரகு தயாரானார். 2006ஆம் ஆண்டு திண்டிவனத்தில் சி.வி. சண்முகம் அலுவலகத்துக்குள்ளேயே கொலைவெறியுடன் கும்பல் ஒன்று புகுந்தது. சண்முகம் எங்கே என்று அரிவாளுடன் தேடியபோது, சண்முகத்தின் உதவியாளர் முருகானந்தம் அவர்களைத் தடுக்க அக்கொலைவெறிக் கும்பல் முருகானந்தத்தை வெட்டிக் கொன்றுவிட்டு சண்முகத்தைத் தேடியது. சண்முகம் தப்பித்து ஓடிவிட்டார். இருந்திருந்தால் அவரும் கொல்லப்பட்டிருப்பார். முருகானந்தம் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இராமதாசு இரண்டாவது குற்றவாளியாக அன்புமணி, மூன்றாவது குற்றவாளியாக சரஸ்வதி, நான்காவது குற்றவாளியாக இராமதாசின் தம்பி சீனிவாச கவுண்டர் என்று இராமதாசின் குடும்பத்தினர் பதினொரு பேர் குற்றவாளிகளாக சட்டத்தின் முன் நின்றார்கள்.

இவ்வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றுவந்த ரகு அடிக்கடி தைலாபுரம் சென்று, “நீங்கபாட்டுக்கு கொலை செய்யச் சொல்லிட்டுப் போயிட்டீங்க... யாரு கோர்ட்டுக்கு செலவு பண்ணுவாங்க? என்று செலவுக்கான தொகையைக் கேட்க ஆரம்பித்தார். “அதெல்லாம் இல்ல... வெளிய போடா..” என்று இராமதாசும் அவரது மனைவியும் விரட்டியடிக்க “அப்படியென்றால் நான் அப்ரூவராக மாறி போலீசில் எல்லா உண்மையையும் சொல்வேன்” என்று ரகு சொன்னதும் பயந்துபோன இராமதாசு அப்போதைக்கு பேசி ரகுவை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். ஓரிரு நாளில் ரகு தர்பூசணித் தோட்டத்தில் இரவில் காவல் காத்துக்கொண்டிருந்தபோது கைத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். காவல்துறையின் கருணையால், வழக்கம்போல் தற்கொலை வழக்காக முடித்தனர்.

பா.ம.க.வில் இளைஞர்களின் ஆதரவைப் பெருமளவில் பெற்று தனித்துவமாக வளர்ந்துவந்த பண்ருட்டி வேல்முருகனின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் பொறுமிக் கொண்டிருந்தார் இராமதாசு. 2011 தேர்தலில் பா.ம.க. படுதோல்வியைச் சந்தித்த பின் வேல்முருகன் அவர்களை கட்சியை விட்டு நீக்கினார். வேல்முருகனும் ஞாயம் கேட்டு ஊர் ஊராய் இளைஞர்களை அணிதிரட்டினார். இளைஞர்களும் பெருமளவில் வேல்முருகன் அவர்களின் பின்னால் திரண்டனர். இதனால் ஆத்திரமடைந்த இராமதாசு வழக்கம்போல் தனது கொலைவெறித் திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பித்தார். திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக காடுவெட்டி அருகே போய்க்கொண்டிருந்தபோது காடுவெட்டி குருவின் ரவுடிக் கும்பல் வேல்முருகன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. இதில் பலர் காயமடைந்தனர்.

இப்படி ஒரு ரவுடியைப் போல கொலைகளையும் கொலை முயற்சிகளையும் இராமதாசு நடத்தியது வேறு இனத்தவர் மீதல்ல. எந்தச் சமூகத்திற்கு உழைப்பதாகச் சொல்லி கட்சியைத் தொடங்கினாரோ, அந்த சொந்த வன்னிய சமூகத்தினர் மீதுதான் இவ்வளவு கொலைவெறியாட்டத்தையும் நடத்தினார். பா.ம.க.வின் மாணவரணியின் பொறுப்பாளராக இருந்த அறிவுச்செல்வன் கார் விபத்தில் இறந்ததாக செய்திகள் வந்தன. இது விபத்தல்ல, கொலைதான் என்று அறிவுச்செல்வனின் தந்தை சொன்னதோடு இராமதாசுக்கு எதிராக 16 கேள்விகளை எழுப்பினார். அந்தக் கேள்விகள் ஒட்டுமொத்த வன்னிய மக்களின் மனசாட்சியாய் இராமதாசின் முன் நிற்கின்றன.
சொந்த மக்களையே தன்னுடைய குடும்ப வளர்ச்சிக்காகப் பலி கொடுத்துவரும் இராமதாசு அப்பாவி தலித் மக்களை மட்டும் சும்மா விட்டுவிடுவாரா?

தலித்துகளின் தலைநிமிர்வுக்காகக் களமாடிவரும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீது பல முறை, பல்வேறு இடங்களில் கொலைவெறித் தாக்குதலை நடத்தினார் இராமதாசு. அத்தாக்குதலையெல்லாம் சிறுத்தைகள் முறியடித்தன. ஆனாலும் எத்தனையோ தலித் இளைஞர்கள் இராமதாசின் சாதிவெறியால் கொல்லப்பட்டனர். தர்மபுரி சேரி மட்டுமல்ல பெரம்பலூர், ஒகளூர் சேரி மட்டுமல்ல வட மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட சேரிகள் தீக்கிரையாக்கப்பட்டன.

மரக்காணம் கலவரம் 
காதல் நாடகம், சாதி கவுரவம் என்று தலித்துகளுக்கு எதிராகப் பல சாதிகளை ஒருங்கிணைத்து தமிழகம் முழுக்க வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார். காதலித்துத் திருமணம் செய்துகொண்டு தனது காதல் மனைவியோடு வாழ்ந்த இளவரசனையும் திவ்யாவையும் பிரித்ததோடு இளவரசனைக் கொலை செய்துவிட்டு தனது சாதிய தாகத்தைத் தீர்த்துக் கொண்டார்.

இவையெல்லாம் இராமதாசின் கொலைவெறி, வன்முறை அரசியலுக்கு எடுத்துக்காட்டுகள். (தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்துச் சொல்வதென்றால் அதற்குத் தனியாக ஒரு புத்தகமே போடலாம்)

தி.மு.க. தலைவர் கலைஞருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு செய்தியாளரிடம் பேசிய இராமதாசு, “கலைஞர் அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிப்பவர், அந்த நாகரிகம் பாராட்டுக்குரியது” என்று சொன்னார். கலைஞர் நாகரிகமானவர்தான். ஆனால் இராமதாசு நாகரிகமானவரா? தருமபுரி கலவரத்திற்குப் பிறகு அவர் பேசிய பேச்சுக்களை இப்பவும் ‘யூ டியூப்’பில் பார்க்கலாம் அவரது நாகரிகத்தின் லட்சணத்தை (இணைக்கப்பட்டுள்ளது: குச்சிகொளுத்தி ராமதாசின் சாதி வெறி பேச்சு & காடுவெட்டி குருவின் சாதி வெறி பேச்சு). ஆசிரியர் கி.வீரமணி, ஜி.ராமகிருஷ்ணன், சுப.வீரபாண்டியன், கொளத்தூர் மணி மற்றும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் பலரை அவன், இவன் என்று ஒருமையில் பேசியதும், முதுபெரும் அரசியல்வாதியான, கலைஞரை மேளம் அடிக்கிற பயல், சாதிகெட்ட பயல், அவன் கூட இருந்தால் கட்டியிருக்கிற வேட்டியக்கூட உருவிடுவான் என்று பேசியதும்தான் நாகரிக அரசியல் பண்பாடா?


பா.ம.க. தொடங்கியதிலிருந்து இராமதாசின் பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் பார்த்தால், முன்னுக்குப்பின் முரணாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். தனது குடும்பத்திலிருந்து மகனோ வேறு யாருமோ அரசியலுக்கு வரவே மாட்டார்கள் என்று சத்தியம் செய்த இராமதாசுதான் இப்போது அதே அன்பு புத்திரனுக்காகக் கேவலமான அரசியல் செய்து வருகிறார். திராவிடக் கட்சிகளோடும் தேசியக் கட்சிகளோடும் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு வெட்கமே இல்லாமல் அவர்களின் கூட்டணிக்காக நாக்குத் தொங்க அலைகிற நாயாக மாறிவருவது அரசியல் நாகரிகமா?

பேசுகிற இடங்களிலெல்லாம் வன்முறையைத் தூண்டி விடுவதும், தமிழர்களாய் ஒருங்கிணைந்து தமிழ்த் தேசிய அடையாளத்தை மீட்க வேண்டிய வன்னிய சமூகத்திற்கு சாதிவெறி ஊட்டி தவறாக வழிகாட்டுவதுதான் நாகரிகமா? சொந்தச் சமூகத்தை நாகரிக உலகத்திற்கு அழைத்துச் செல்லாமல் கற்காலத்துக்கு அழைத்துச் செல்வதுதான் வழிகாட்டும் அரசியல் தலைவரின் நாகரிகமா?

வன்னிய மக்களுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லும் இராமதாசு அந்த மக்களுக்குச் செய்தது என்ன என்று அவரது மனசாட்சியைக் கேட்டாலே தெரியும். அவர் அரசியலில் நுழைந்த காலத்தில் ‘டி.எஸ்.இ. 1819’ என்கிற ஓட்டை அம்பாசிடர் காரில்தான் சுற்றினார். இன்றைக்கு அவரது நிலை என்ன? மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி என ஒவ்வொருவருக்கும் பல கோடி மதிப்புள்ள சொகுசுக் கார்கள். ஒன்றரை ஏக்கர் நிலத்தை வைத்திருந்த இராமதாசுக்கு இன்றைக்கு 1000 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட தைலாபுரம் பண்ணை; ஏற்காட்டிலும் ஏலகிரியிலும் 1000 ஏக்கர் பரப்பளவில் எஸ்டேட்டுகள்; திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளில் மட்டும் 10க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள், கேஸ் ஏஜென்சிகள், கோடம்பாக்கத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நடிகை விஜயசாந்தியின் வீட்டை விலைக்கு வாங்கி மூத்த மகள் காந்திக்குக் கொடுத்தது, ஆழ்வார்பேட்டையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவை வாங்கி இளைய மகள் கவிதாவுக்குக் கொடுத்தது, கிழக்குக் கடற்கரைச் சாலையில் பங்களாக்கள் என்று சொத்துக்களைக் குவித்துள்ள இராமதாசு தன் சொந்த சாதி மக்களின் கண்ணீரைத் துடைத்திருக்கிறாரா? பசியைத் தீர்த்திருக்கிறாரா? (பார்க்க- ஆலம்பாடி மக்களின் அழுகுரல்: தூய்மைவாதமும், சாதியவாதமும் பதில் கூறுமா?) வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களைக் குவித்துள்ள இராமதாசு ஜெயலலிதாவின் வழக்குகளைப் பேசுவது காமெடியாக இருக்கிறது.

ஜெயலலிதாவின் கைதை ஒட்டி அதிமுகவினர் ஆங்காங்கே செய்துவரும் வன்முறைகளை ஒப்பீட்டளவில் பார்த்தால் சாதாரணம்தான். மாமல்லபுரத்தில் ஜெயலலிதாவை விமர்சனம் செய்து பேசிய பிறகு இராமதாசு கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதையொட்டி நடந்த வன்முறைகளோடு, வெடிகுண்டு வீச்சுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அதிமுகவினரின் போராட்டங்கள் மிகமிகச் சாதாரணம்.


ஆக, எப்படிப் பார்த்தாலும் தமிழக அரசியலில் நாகரிகம் குறித்தோ, வன்முறை குறித்தோ, சொத்துக் குவிப்பு தொடர்பாகவோ பேசுவதற்கு இராமதாசுக்கு எந்த அருகதையும் இல்லை. இன்றைக்கு ஜெயலலிதாவுக்கு எதிராக இராமதாசு பேசி வருவது திருச்சி சிறையில் அடைத்ததால் உள்ள வெறுப்புணர்ச்சியாலும் பழிவாங்கும் உணர்ச்சியாலுமே தவிர வேறல்ல.

விஜயகாந்த், ஜி.ராமகிருஷ்ணன் போன்ற தலைவர்கள் அதிமுகவினரைக் கண்டிப்பதற்கு ஒரு ஜனநாயக உரிமை உண்டு; கடமையும் உண்டு. ஆனால் இராமதாசுக்குத் தெரிந்ததெல்லாம் வன்முறைதானே. அப்படிப்பட்ட வன்முறையாளருக்கு அதிமுகவினரையோ ஜெயலலிதாவையோ கண்டிக்க எந்த அருகதையும் இல்லை. தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய தீய சக்தி இராமதாசுதான். இதை கலைஞர் உட்பட அனைவரும் புரிந்துகொண்டு எச்சரிக்கையாய் இருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டிற்கு நல்லது.

25 comments:

RAJARAJAN VANNIYAR said...

ஒரு பிற்படுத்தப்பட்ட தலைவரை கேவலமாக இட்டு கட்டி சித்தரிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்..

Vinoth Kumar said...

சரி இராமதாசு வன்முறையை கண்டிக்க கூடாது சொல்றிங்க ஓகே , நீங்கதான் அமைதியின் உருவான உங்க திருமாவை இது சம்பந்தமாக பேச சொல்ல வேண்டியது தானே ? ஏன் பயம் ? அவங்களுக்கு மடியில் கணம் இல்லை , அதனால் தவறுகளை சுட்டி காட்டறாங்க ..,
நீங்கதான் திமிறி எழுகிற ஆட்களை ஆச்சே பேச வேண்டியது தானே ? உங்கள் வீரம் எல்லாம் அப்பாவிகளிடம் மட்டும்தானா ?

Arun P said...

.ராமதாஸ்க்கு
வயிற்றெரிச்சல்
ஆம் திராவிட
கட்சிகளின்
ஊழலை கண்டு
தமிழனாக
வயிற்றெரிச்சல்
படுகிறார்

Vijay said...

ஜெயா வழக்கு, கைது, அதன்பிறகு நடந்த வன்முறை எதற்கும் உங்க சிறுத்தை தரப்பிலிருந்து எந்த ஒரு அறிக்கையும், பேட்டியும் வரவில்லையே ஏன்? திருமா மௌனம் காப்பது ஏன்??? ஆளும் கட்சியை எதிர்க்க, பகைத்துக்கொள்ள பயமா??? அது சிறுத்தை இல்லை பூனை. இந்த லட்சணத்தில் கேட்பவர்களை விமர்சனம் செய்வது சிரிக்க வைக்கிறது.

Vijay said...

கட்சியில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர் பொறுப்பில் உள்ள நீங்கள் (வன்னியரசு) ஒரு கட்சியின் தலைவரை "இராமதாசு என்கிற ஓநாய்" என்பது எப்படி ஒரு அரசியல் நாகரீகமாகும். இதுவே வன்முறையை தூண்டும் ஒரு பேச்சுதானே . ஒரு தலைவர் பொறுப்பில் உள்ளவர்களே இப்படி வன்முறையை தூண்டும் வார்த்தைகளை பிரயோகிக்கும்போது உங்கள் தொண்டர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை மக்களே தெரிந்துகொள்வார்கள்.

Shaffan Adv said...
This comment has been removed by the author.
Vijay said...

இதில் உள்ளவை நல்ல காமெடி கலந்த கதையாகவே தெரிகிறது...நீங்கள் திரைப்படத்திற்கு கதை எழுத முயலுங்கள்.

Venkatesan Sundaramoorthy said...

தன்னோட வீட்டை தானே கொளுத்திக்கிட்டு அரசோட சலுகைக்கு அலைபவர்கள் கேட்கலாமே இந்த வன்முறையை ஏன் கேட்கவில்லை அம்மா வெளிய வந்தா ஆப்பு அடிக்கும் என்ற பயமா ..ஆமாம் நாம தான் அடங்க மறு அத்துமீறு என்று வீர வசனம் பேசுவோமே அதுபோல இந்த வன்முறைக்கு எதிரா கோவை கவிதா வீட்டுகாரரை ஒரு அறிக்கை விட சொல்லு பார்ப்போம் ..வீரவசனம் பசியால் மட்டும் போதாது தமிழக நலனுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றால் ஆண்மை வேண்டும் அது உங்களிடம் இல்லை இதுல மருத்துவரை விமர்சனம் வேறு ....

mohan said...

ஆம்.,தாங்கள் கூறுவதுபோல் அவர் குச்சி கொளுத்தியாகவே இருந்துவிட்டு போகட்டும்., ஆனால் அன்று அவர் கொளுத்திய குச்சியினால்., இன்று என்னை போன்று பலரது வாழ்வில் இடஒதுக்கீடு என்ற விளக்கை எற்றி வைத்துள்ளார்.

இன்று பலருக்கு அடுத்தவர் தவறை சுட்டீக்காட்டுவதைவிட., அடுத்தவரை விமர்சிக்க அதிக நேரமும் .... லாபமும்... உள்ளது போல

senthilkumar galaxy said...

குச்சி கொளுத்தி -- இதை யார் சொலவது - தன் வீட்டை கொளுத்தி கோடிகணக்கில் வந்த பணத்தில் கமிசன் பெற்ற கட்சிக்காரன் சொல்வது தான் வேடிக்கை. எவனோ கொளுத்தின வீட்டுல ரேஷன்கார்டு மட்டும் எறியவே மாட்டங்குது இந்த டேக்னிக் எல்லாருக்கும் கத்து குடுங்கப்பா. திமிறி எழும் தலைவன் ஏன் அறிக்கை விட வில்லை எல்லாம் அடங்கி விட்டதா கவிதா கிட்ட ?/ தாய்மண் - வெளிச்சம் எல்லாம் உங்கள் வியர்வை சிந்தி சம்பரிதது -ஆமா நீங்க என்னா வேலை பாக்கிறீங்க அதையும் சொல்லுங்க. உங்களுக்கு -செல்வ பெருந்தொகைக்கும் உள்ள வரப்பு பிரச்னை பற்றி ஒரு கட்டுரை மறக்காம எழுதுங்க.

anand said...

அது எல்லாம் சரி விடுதலை சிறுத்தை கட்சி எப்படி காந்தி வழிய பின் பற்றும் கட்சியா ?? கவிதா வாழ்கைக்கு முதலில் பதில் சொல்லுங்க பாஸ் கவிதாகு திருமா மட்டும் தன கணவரா இல்லை நீங்களுமா ??? ராமதாஸ் ஆம்பள சிங்கம்யா அவரு தைரியமா அறிக்கை விடுறாரு உங்களுக்கு தான் திமிறி ஏழு திருப்பி அடி எல்லாம் கொள்கை ஆச்சே அறிக்கை விட வேண்டியது தான ஆம்பளைய இருந்தா

kamaraj jayankondam said...

தன் சாதிக்கு ராமதாஸ் ஒன்றுமே செய்யவில்லை என்பவர்களின் கவனத்திற்கு. அரசியல் இயக்கம் ஆரம்பிக்கும் முன்பாகவே நீங்கள் சொல்கிற அதே அம்பாசிடர் காரில் ஊர் ஊராய் சுற்றி சிதறி கிடந்த எம் மக்களை ஒன்று சேர்த்து வன்னியர் உட்பட 108 சாதிகளுக்கு இடஒதுக்கீடு பெற்று தந்தவர் எங்கள் அய்யா.

இடஒதுக்கீடு பெற்று தருகிறேன் படியுங்கள் என்கிறார் எம் தலைவர். வன்முறை கோஷங்களை கொள்கைகளாக எம் அய்யா எங்களுக்கு சொல்லி தரவில்லை.. யார் சொல்லி தருகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்..

இன்று மட்டுமல்ல தமிழ்நாட்டில் எந்த கட்சி தவறு செய்தாலும் முதலில் கண்டிக்கும் நபர் எங்கள் அய்யாதான். அது கூட்டணி கட்சியாக இருந்தாலும் சரி ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி..

நேரத்திற்கேற்ப ஜால்ரா போட்டுக் கொண்டு அடங்கி போகிறவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும்..

SAAMIKACHIRAYAR said...

தன் சாதிக்கு ராமதாஸ் ஒன்றுமே செய்யவில்லை என்பவர்களின் கவனத்திற்கு. அரசியல் இயக்கம் ஆரம்பிக்கும் முன்பாகவே நீங்கள் சொல்கிற அதே அம்பாசிடர் காரில் ஊர் ஊராய் சுற்றி சிதறி கிடந்த எம் மக்களை ஒன்று சேர்த்து வன்னியர் உட்பட 108 சாதிகளுக்கு இடஒதுக்கீடு பெற்று தந்தவர் எங்கள் அய்யா.

இடஒதுக்கீடு பெற்று தருகிறேன் படியுங்கள் என்கிறார் எம் தலைவர். வன்முறை கோஷங்களை கொள்கைகளாக எம் அய்யா எங்களுக்கு சொல்லி தரவில்லை.. யார் சொல்லி தருகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்..

இன்று மட்டுமல்ல தமிழ்நாட்டில் எந்த கட்சி தவறு செய்தாலும் முதலில் கண்டிக்கும் நபர் எங்கள் அய்யாதான். அது கூட்டணி கட்சியாக இருந்தாலும் சரி ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி..

நேரத்திற்கேற்ப ஜால்ரா போட்டுக் கொண்டு அடங்கி போகிறவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும்..,,

SAAMIKACHIRAYAR said...

நீங்கள் சொல்கிற குற்றசாட்டுகள் தவறானவை ஆதாரமற்றவை வன்மையாக கண்டிக்கிறேன்

anandhavel raja said...

தன்னோட வீட்டை தானே கொளுத்திக்கிட்டு அரசோட சலுகைக்கு அலைபவர்கள் கேட்கலாமே இந்த வன்முறையை ஏன் கேட்கவில்லை அம்மா வெளிய வந்தா ஆப்பு அடிக்கும் என்ற பயமா ..ஆமாம் நாம தான் அடங்க மறு அத்துமீறு என்று வீர வசனம் பேசுவோமே அதுபோல இந்த வன்முறைக்கு எதிரா கோவை கவிதா வீட்டுகாரரை ஒரு அறிக்கை விட சொல்லு பார்ப்போம் ..வீரவசனம் பசியால் மட்டும் போதாது தமிழக நலனுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றால் ஆண்மை வேண்டும் அது உங்களிடம் இல்லை இதுல மருத்துவரை விமர்சனம் வேறு ....
mother fucker reply for this

anandhavel raja said...

தன் சாதிக்கு ராமதாஸ் ஒன்றுமே செய்யவில்லை என்பவர்களின் கவனத்திற்கு. அரசியல் இயக்கம் ஆரம்பிக்கும் முன்பாகவே நீங்கள் சொல்கிற அதே அம்பாசிடர் காரில் ஊர் ஊராய் சுற்றி சிதறி கிடந்த எம் மக்களை ஒன்று சேர்த்து வன்னியர் உட்பட 108 சாதிகளுக்கு இடஒதுக்கீடு பெற்று தந்தவர் எங்கள் அய்யா.

இடஒதுக்கீடு பெற்று தருகிறேன் படியுங்கள் என்கிறார் எம் தலைவர். வன்முறை கோஷங்களை கொள்கைகளாக எம் அய்யா எங்களுக்கு சொல்லி தரவில்லை.. யார் சொல்லி தருகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்..

இன்று மட்டுமல்ல தமிழ்நாட்டில் எந்த கட்சி தவறு செய்தாலும் முதலில் கண்டிக்கும் நபர் எங்கள் அய்யாதான். அது கூட்டணி கட்சியாக இருந்தாலும் சரி ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி..

நேரத்திற்கேற்ப ஜால்ரா போட்டுக் கொண்டு அடங்கி போகிறவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும்..,,
answer for this if you born for one father

anandhavel raja said...

அது எல்லாம் சரி விடுதலை சிறுத்தை கட்சி எப்படி காந்தி வழிய பின் பற்றும் கட்சியா ?? கவிதா வாழ்கைக்கு முதலில் பதில் சொல்லுங்க பாஸ் கவிதாகு திருமா மட்டும் தன கணவரா இல்லை நீங்களுமா ??? ராமதாஸ் ஆம்பள சிங்கம்யா அவரு தைரியமா அறிக்கை விடுறாரு உங்களுக்கு தான் திமிறி ஏழு திருப்பி அடி எல்லாம் கொள்கை ஆச்சே அறிக்கை விட வேண்டியது தான ஆம்பளைய இருந்தா

anandhavel raja said...

குச்சி கொளுத்தி -- இதை யார் சொலவது - தன் வீட்டை கொளுத்தி கோடிகணக்கில் வந்த பணத்தில் கமிசன் பெற்ற கட்சிக்காரன் சொல்வது தான் வேடிக்கை. எவனோ கொளுத்தின வீட்டுல ரேஷன்கார்டு மட்டும் எறியவே மாட்டங்குது இந்த டேக்னிக் எல்லாருக்கும் கத்து குடுங்கப்பா. திமிறி எழும் தலைவன் ஏன் அறிக்கை விட வில்லை எல்லாம் அடங்கி விட்டதா கவிதா கிட்ட ?/ தாய்மண் - வெளிச்சம் எல்லாம் உங்கள் வியர்வை சிந்தி சம்பரிதது -ஆமா நீங்க என்னா வேலை பாக்கிறீங்க அதையும் சொல்லுங்க. உங்களுக்கு -செல்வ பெருந்தொகைக்கும் உள்ள வரப்பு பிரச்னை பற்றி ஒரு கட்டுரை மறக்காம எழுதுங்க.

Jaimani said...

நல்லதொரு கதை திரைக்கதை

Subramani Thangasamy said...

கற்ப்பனை கதை எழுதுவதில் நீங்கள் வள்ளவர்தான் பாராட்டுக்கல்

Peru Sarithiran said...

உண்மையான வரலாற்று பதிவு.

rajesh raj said...

அருமையான பதிவு.இவரை நம்பியும் ஒரு கூட்டம்.

ரா, மோகன் தாஸ் அத்திப்பக்கம் வந்தவாசி மேற்கு ஒன்றியம் said...

டேய் தம்பி வன்னி அரசு என்ன த்தா நான் சொல்ல உனக்கு தேவை பணம் அதுக்கு எதுக்கு உனக்கு வின் விளம்பரம் .....

உங்கள் தலைவர் திருமாவளவன் கவிதா நிகழ்வு கேளுங்கள்.

உங்கள் தலைவர் திருமாவளவன் க்கு அப்பா யார்..


தொல் . திருமாவளவன் என்று என் குப்பிடுகின்றிர்

விசிக ஆரம்பத்தில் எப்படி உருவனது எதற்காக உருவாக்க பட்டது ??????

உங்கள் கட்சியில் இருக்கும் நிர்வகிக்களுகு நீங்கள் குறும் அறிவுரை என்ன

உங்கள் தலைவர் திருமாவளவன் இல்லைங்க சென்று வந்த போது பணம் வங்கி வந்தார் உங்கள் தலைவர் திருமாவளவன் mp யா இருந்த போது சிதம்பரம் தொகுதியில் செய்த பங்களிப்பு என்ன

திருமாவளவன் வங்கியின் சொத்து மதிப்பு என்ன
உங்கள் தலைவர் திருமாவளவன் திருத்தணி அறிகிள் 200 சொத்து எப்படி உருவனது

ramesh raji said...

இவனே ஒரு லூசு பற புண்ட ஏன்டா நீ வேற

ramesh raji said...

இவனே ஒரு லூசு பற புண்ட ஏன்டா நீ வேற

Post a Comment