20 August 2011

பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள்


மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு சென்னையில் 20.08.2011 அன்று தொடர் முழக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரை காப்பாற்றுங்கள் என்ற வாசகம் அடங்கிய பனியனை அளிக்கப்பட்டது. 



13 August 2011

இன்னும் ஏனடா தகுதி - திறமைன்னு பினாத்துறீங்க!

  “பார்ப்பனியத்தின் இனவெறி எந்த வடிவத்திலும் தாக்கும்; எந்த நேரத்திலும் தாக்கும்” என்பார் அய்யா பெரியார். இப்போது ‘ஆரக்ஷன்’ என்னும் இந்தித் திரைப்படத்தின் மூலம் புதிய உத்தியாய் தாக்குதலைத் தொடங்கி இருக்கிறார்கள் வடக்கு ஆரியவாதிகள். அந்தத் தாக்குதலுக்கு, ‘திருப்பி அடி’ என்று கற்றுக்கொடுத்த தலைவர் எழுச்சித்தமிழர்வழிவந்த விடுதலைச்சிறுத்தைகள் எதிர்த்தாக்குதலைக் கொடுத்திருக்கிறார்கள்.

12 August 2011

`ஆராக்ஷன்' திரைப்படத்திற்கு எதிர்ப்பு! நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கைது

இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்களோடும், தலித் மக்களை சிறுமைப்படுத்தும் காட்சிகளோடும் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஆராக்ஷன்’ திரைப்படத்துக்கு உத்திரப்பிரதேசம், பீகார், ஆந்திரப் பிரதேசம் ஆகிய அரசுகள் தடைவிதித்துள்ளன. தமிழ்நாட்டிலும் இத் திரைப்படத்துக்கு தடைவிதிக்கக்கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பாக இன்று காலை 12-8-2011 கலை 10 மணியளவில் சென்னை சத்யம் திரையரங்கம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

02 August 2011

இணையத்தள வியாபாரிகளே, இன விடுதலைக்கு இரண்டகம் செய்யாதீர்!

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க இரண்டு கொடுமை அம்மணமா ஆடுச்சாம்- இந்த கிராமப்புறத்துப் பழமொழி போல சில இணையத்தள வியாபாரிகள் ஈழத்தமிழர்கள் விடுதலைக்கு எதிராக கொடுமைபுரிந்து வருகிறார்கள். அதில் முன்னணியில் இருப்பவர்கள் ‘அதிர்வு’, ‘மீனகம்’ என்கிற இணையத்தள வியாபாரிகள். இந்த இணையத்தளங்களை ஆரம்பித்திருப்பதன் நோக்கம் என்ன? ‘விக்கிலீக்ஸ்’ போல சிங்கள இராணுவக் கொடுமைகளை அம்பலப்படுத்துவதற்காகவா?  சிதறிக்கிடக்கிற விடுதலைப்புலிகளை ஒருங்கிணைக்கவா?  தமிழின உணர்வாளர்களை ஒருங்கிணைக்கவா? எதுவுமே இல்லை. பின் எதற்காக ஆரம்பித்து இருக்கிறார்கள் என்று கோபப்படத்தான் தோன்றுகிறது.

தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிற ஈழத்தமிழ் இளைஞர்கள் சிலர் யுத்தத்திற்கு முன்பே வெளிநாடுகளில் செட்டிலாகிவிட்டார்கள். யுத்தக் களத்தில் சமராட அஞ்சி வெளிநாடுகளுக்கு ஓடி அங்கு குடியும் கூத்துமாய் வாழ்வைத் தொடர்ந்தார்கள். இப்போது அவர்கள் பொழுது போகாமல் தமிழகத்தில் உள்ள சில ஆதிக்கவாதிகளுக்கு எடுபிடிகளாய் இருந்து கொண்டு இணையத்தளங்களை நடத்துவதுதான் வேதனையிலும் வேதனை.

கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காகத் தமது வாழ்வை அர்ப்பணித்தவர். இந்த அர்ப்பணிப்புக்காகத்தான் 2002ஆம் ஆண்டு தமிழர் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் எழுச்சித் தமிழரை வன்னிக்கு அழைத்துப் பேசி தமிழகத்தில் விடுதலைச்சிறுத்தைகளின் பங்களிப்பைப் பாராட்டி அனுப்பி வைத்தார்.