13 September 2011

பேய் அரசாண்டால்...


இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் அரச பயங்கரவாதம் காக்கிச் சட்டை வடிவத்தில் தலித்துகளைக் கொன்று குவிக்குமோ என்று தெரியவில்லை?

ஜெயலலிதா அம்மையார் அரியணைக்கு வந்ததும் வராததுமாய் தலித்துகளின் இரத்தத்தை தமிழகத்தின் வீதிகளில் தெளித்திருக்கிறார். 

மாவீரன் இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளான செப்டம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து காலை முதலே எழுச்சிகரமான உணர்ச்சிகளுடன் பரமக்குடியை நோக்கி ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் வாகனங்களில் அணிவகுக்க ஆரம்பித்தனர்.  தம்மைத் தலைநிமிர வைத்த அத்தலைவனின் நினைவுநாளில் அஞ்சலி செலுத்தத்தான் எவ்வளவு ஆர்வத்துடனான கடமை!  மக்கள் திரள் கட்டுக்கடங்காமல் போனது. 

10 September 2011

சாதி ஒழிப்பு போராளி இம்மானுவேல் சேகரனின் ஈகத்திலிருந்து பாடம் படிப்போம்!


குடிநீர்க் கிணறுகளில் மலத்தை வீசினார்கள்; குடியிருக்கும் வீடுகளை எரித்தார்கள்; ஒருவர்கூட வெளியில் வரமுடியவில்லை; வெளியில் வந்தவர் ஒருவர்கூட உயிருடன் திரும்பவில்லை; வெட்டி சாலையில் போட்டார்கள்; பெண்கள் நிலையைச் சொல்லவே வேண்டியதில்லை; மரண ஓலங்களும் ஒப்பாரிகளும் வீதிகளை முற்றுகையிட்டன; மாடுகளும் ஆடுகளும் ஆங்காங்கே செத்துக் கிடந்தன; குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் காட்டிலும் மேட்டிலும் சுற்றிக்கொண்டிருந்தார்கள்; போலீசும் இராணுவமும் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இக்கொடுமைகள் எல்லாம் எங்கு நடந்தன?

08 September 2011

“நான் உமி கொண்டு வருகிறேன்! நீ அரிசி கொண்டு வா! இரண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடலாம்!

  “நான் 
  உமி கொண்டு வருகிறேன்!
  நீ அரிசி கொண்டு வா!
  இரண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடலாம்!

  என்கிற கதையாகப் போய்க்கொண்டு இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல்.

  பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனு இந்திய குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது முதலே தமிழ்நாட்டுத் தமிழர்களின் இரத்தம் சூடேறியது. தமிழீழ ஆதரவு இயக்கங்கள் தனித்தனியாகப் போராட்டங்களை நடத்தின.

  விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் 19.8.2011 அன்று சென்னையிலும் 22.8.2011 அன்று தமிழ்நாடு முழுக்கவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதுமட்டுமல்லாமல் விடுதலைச் சிறுத்தைகளும் பா.ம.க.வும் இணைந்து தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் சார்பில் ‘மரணதண்டனை ஒழிப்பு மாநாடு' என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டை ஒருங்கிணைத்தன!  மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.

06 September 2011

பெண்கள் சுதந்திரமாகப் ‘பற’க்கட்டும்


தூக்குக் கொட்டடியின் கீழ் நிற்கும், நிரபராதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி தமிழக மக்கள் கொதித்தெழுந்தனர். விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் 19.8.2011ஆம் நாள் சென்னையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 22.8.2011ஆம் நாள் தமிழகம் முழுக்க விடு தலைச்சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.