26 January 2012

பழ.நெடுமாறன் அவர்களுக்கு பகிரங்கக் கடிதம்


படம் நன்றி : ஜீனியர்விகடன்
மேதகு பிரபாகரன் வழியா? அரசியல் புரோக்கர் நடராசன் வழியா?

தமிழ்த் தேசியப் பெருந்தலைவர் என்று உலகத் தமிழர்களால் அழைக்கப்படும் மரியாதைக்குரிய அய்யா பழ.நெடுமாறன் அவர்களுக்கு வணக்கம்.  நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்; விரும்புகிறேன்.
‘கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனால் அங்க ரெண்டு கொடுமை அவுத்துப்போட்டு ஆடுச்சாம்’ என்ற கதையாக இந்துத்துவ-சாதியத்தை அடித்தளமாகக் கொண்ட இந்திய தேசிய கொள்கையிலிருந்தும் பார்ப்பனியக் கொள்கையிலிருந்தும் விடுபட்டு தமிழ்த்தேசியக் களத்திற்கு வந்தால் இங்கும் அதே கொடுமை தலைவிரித்தாடினால் என்ன செய்வதய்யா?  அந்தக் கொடுமைகளை உங்களைப் போன்றவர்களும் முன்னெடுத்துச் செல்வதைப் பொறுக்க முடியாமல்தான், சமூகத்தின் கடைக்கோடியிலிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் விடுதலைச் சிறுத்தைகளில் ஒருவனாகவும் இருந்து தங்களுக்கு இந்த மடலை எழுதுகிறேன்.
உங்களைப் புண்படுத்தும் நோக்கத்துடனோ, அல்லது திட்டமிட்ட அரசியல் நோக்கத்துடனோ இம்மடலை தங்களுக்கு எழுதவில்லை.  உங்களை, உங்களின் அரசியல் பயணத்தை மதிப்பவன் என்கிற உரிமையில் இந்த மடலை எழுதுகிறேன். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் எழுப்பும் எந்த கேள்விக்கும் உங்களால் பதில் சொல்லப்படுவதில்லை. ஒரே வார்த்தையில் அதை அவதூறு என்று சொல்லாமல் - மௌனமாக இருந்துவிட்டுச் செல்வீர்கள். முன்னர் எல்லா காலத்தையும் விட ஏராளமான இளைஞர்கள் இன்று தமிழ்த் தேசிய அரசியலில் ஈர்ப்பாகி அமைப்புகளுக்கு வருகிறார்கள். அவர்கள் இனியும் ஏமாறக்கூடாது என்பதாலேயே இதை எழுதுகிறேன்.

19 January 2012

தமிழகத்தில் நடப்பது சண்டிராணி ஜெயலலிதா அரசா? மலையாள வெறியன் உம்மன்சாண்டி அரசா?


அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  நஞ்சு கொடுத்துக் கொல்லப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  கழுத்தை நெறித்துக் கொலை செய்வதைப்  படித்திருப்போம். ஆனால் கொதிக்க வைத்த வெந்நீரை ஊற்றிக் கொலை செய்யப்படுவதை இப்போதுதான் தமிழகம் கேள்விப்பட்டிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்தவர்  சாந்தவேல்.  மனைவி சித்ரா, பெண் குழந்தைகள் தட்சனா, சஞ்சனாவுடன் தானுண்டு, தனது பிளம்பர் வேலையுண்டு என்று வாழ்ந்து வந்தார்.  ஒவ்வோர் ஆண்டும் சபரிமலை சென்று அய்யப்பனை வழிபடுவதையும் மற்றொரு முக்கிய வேலையாகக் கொண்டிருந்தார். 

26 November 2011

மாவீரர் நாள் சிறப்புப் பாடல் - வன்னிஅரசு


பல்லவி 

புதைகுழி
புதைகுழி
மாவீரர்
புதைகுழி
புதைகுழி

விதை குழி
விதை குழி
மீண்டெழும்
விதை குழி
விதை குழி

கரும்புலி
கரும்புலி
களமாடும்
கரும்புலி
கரும்புலி

பகையழி
பகையழி
வேரோடு
பகையழி
பகையழி

விதையயன விதையயன முளைப்போம்
பகைதனை பகைதனை முடிப்போம்

துயரினைத் துயரினைத் துடைப்போம்
விடுதலை விடுதலை படைப்போம் (புதை குழி)


சரணம் - 1 

எங்களின் மாவீரர் கல்லறைகள் பேசும்
உலகத்தை உலுக்கியே மீண்டெழும் தேசம்
காந்தள் மலர்களின் வாசம் வீசும்
கடலும் வயலும் எம் வசமாகும்

இனியயன்ன
இனியயன்ன
சோகம்Š புலிகள்
இலட்சியப்
பாதையில்
வேகம்

ஒப்பாரி
ஓலங்கள்
போதும் Š இனி
தப்பாது
பகை தலை
சாயும் (புதைகுழி)


சரணம் - 2 

வன்னி முல்லை நிலமெங்கும் வீரம்
விதையுண்ட உயிர்களும் கூடவே முழங்கும்
சிதறிய பனைகளும் துளிர்விட்டு முளைக்கும்
சீறியே புலி பாய்ந்து விழிரெண்டும் திறக்கும்

வெடித்தெழும்
வெடித்தெழும்
புரட்சி - மக்கள்
திரட்சியில்
தமிழீழ
ஆட்சி

பிரபாகரன்
எங்கள்
தலைமை - அந்தத்
தலைமைதான்
விடுதலைப்
புதுமை


- புலம்பெயர்ந்த தமிழர்களால் தயாரிக்கப்பட்டு இலண்டனில் 2011 மாவீரர் நாள் நிகழ்வில் வெளியிடவுள்ள இசைப்பேழைக்காக...

பாடல் - வன்னிஅரசு,
இசை - சாய்தர்சன்,
பாடியவர் - கிருஷ்ணராஜ்

02 November 2011

முருகதாசின் ஏழாம் அறிவில் ஓர் அறிவு "மிஸ்ஸிங்'

""என்னுடைய "தாய்மண்' என்கிற கதையை மட்டும் திரைப்படமாக எடுத்திருந்தால் ஈழமே விடுதலை அடைந்திருக்கும்'' என்றுபுலம்பெயர்ந்த தமிழர்களிடமெல்லாம் நாக்கைத் தொங்கப் போட்டு அலைவதைப் போலச் சொல்லித் திரியும், தங்கர்பச்சானாக இருக்கட்டும்...

""ஈழ விடுதலை அரசியலைப் பரப்புவதற்காக கட்சி ஆரம்பிக்கச் சொன்னவரே அண்ணன் பிரபாகரன்தான்'' என்று மேடைதோறும் முழங்கித் திரியும் "புரட்சித் தலைவியின் அன்புத் தம்பி' சீமானாக இருக்கட்டும்...