02 November 2011
""என்னுடைய "தாய்மண்' என்கிற கதையை மட்டும் திரைப்படமாக எடுத்திருந்தால் ஈழமே விடுதலை அடைந்திருக்கும்'' என்றுபுலம்பெயர்ந்த தமிழர்களிடமெல்லாம் நாக்கைத் தொங்கப் போட்டு அலைவதைப் போலச் சொல்லித் திரியும், தங்கர்பச்சானாக இருக்கட்டும்...
""ஈழ விடுதலை அரசியலைப் பரப்புவதற்காக கட்சி ஆரம்பிக்கச் சொன்னவரே அண்ணன் பிரபாகரன்தான்'' என்று மேடைதோறும் முழங்கித் திரியும் "புரட்சித் தலைவியின் அன்புத் தம்பி' சீமானாக இருக்கட்டும்...
""ஈழ விடுதலை அரசியலைப் பரப்புவதற்காக கட்சி ஆரம்பிக்கச் சொன்னவரே அண்ணன் பிரபாகரன்தான்'' என்று மேடைதோறும் முழங்கித் திரியும் "புரட்சித் தலைவியின் அன்புத் தம்பி' சீமானாக இருக்கட்டும்...
26 September 2011
![]() |
| Photo : http://www.flickr.com/photos/bhagathk |
"ஆட்டுக்கும் நாலு காலு மாட்டுக்கும் நாலு காலுன்னு பெரிய பெரிய தத்துவமெல்லாம் சொல்லுவீங்களே! உங்களுக்கே இந்த நிலைமையா?" - நடிகர் ஜனகராஜ் ஒரு திரைப்படம் முழுக்கப் பேசி வரும் வசனம் இது.
இந்தக் காமெடி போல தமிழக அரசியலிலும் பெரிய பெரிய தத்துவங்களை அவ்வப்போது அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறார் மூத்த அரசியல்வாதி தா.பாண்டியன் அவர்கள். சொந்த மூளையைத்தான் கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்தும் அடுத்தவர் மூளையைப் பயன்படுத்துவதில்லை என்ற பெரிய தத்துவத்தைச் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
25 September 2011
உங்கள் வீடு சாதி வெறியர்களால் கொளுத்தப் பட்டிருக்கிறதா? அந்தக் கொளுத்தப்பட்ட வீட்டிலிருந்து பாதி எரிந்தும் எரியாமலும் உள்ள துணிகளைப் பார்த்துக் கதறியிருக் கிறீர்களா? வீட்டில் இருந்த கொஞ்சம் அரிசியும் அந்த நெருப்பில் "கருகிப்'' போனதை முகர்ந்திருக்கிறீர்களா? எரிகின்ற சேரிச் சாம்பலுக்குள் கிடக்கிற 50 பைசா, 1 ரூபாய் பைசாக்களைத் தேடியிருக்கிறீர்களா?
ஒப்பாரியும் ஓலமுமாய் வழிந்தோடும் கண்ணீருடன் உங்கள் தாய் கதறுவதைப் பார்த்திருக்கிறீர்களா?
20 September 2011
![]() |
| cartoon bala |
தமிழக அரசியலிலும் ஒரு கைப்புள்ள சுற்றிக்கொண்டு திரிகிறார். அவர்தான் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்! காங்கிரஸ் கட்சி ஏதோ தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்கவே முடியாத கட்சி போலவும், எல்லா கட்சிகளும் காங்கிரஸ் வந்தால்தான் ஜெயிக்கவே முடியும் என்று கெஞ்சுவது போலவும் இளங்கோவன் உதார் விட்டுக்கொண்டு திரிகிறார். கைவிலங்கு உடைஞ்சதாகவும், விடுதலை அடைந்து விட்டதாகவும், தனித்துப் போட்டியிடப் போவதாகவும் உளறிக்கொண்டு திரிகிறார். ஏதோ தனித்துப் போட்டியிட்டு 10 மாநகராட்சிகளையும், 152 நகராட்சிகளையும், ஒட்டுமொத்த ஊராட்சிகளையும் கைப்பற்றுவது போல காமெடி செய்து வருகிறார்.
Subscribe to:
Comments (Atom)



