Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts
29 January 2012
2009ஆம் ஆண்டு சனவரி 29. இந்த நாளை உணர்வுள்ள தமிழர் எவரும் மறந்து விட முடியாது. முத்துக்குமார் சாவடைந்து மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
'கரும்புலி முத்துக்குமார்' என்று தமிழர்களால் அழைக்கப்படும் அந்த மாவீரன் தன் உடலுக்கு நெருப்பு வைத்துக்கொண்டு, தமிழீழ விடுதலை நெருப்பை தமிழகமெங்கும் பற்ற வைத்து 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. 3ஆம் ஆண்டு நினைவுநாள் நம் மனசாட்சியைப் பிடுங்கித் தின்றுகொண்டிருக்கிறது.
இன்றைக்கும் அந்த சாஸ்திரி பவன் அலுவலகத்தைக் கடக்கும்போதும், மூலக்கொத்தளம் இடுகாட்டிற்குச் செல்லும்போதும் நெருப்பை அள்ளித் தின்ற அந்த முத்துக்குமாரின் நினைவுகள் நம்மை அப்படியே சுட்டெரிக்கின்றன. கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சவக்கிடங்கில் அவனது உடலை கரிக்கட்டையாய் காட்சிக்கு வைத்திருந்தபோது தமிழர்களின் ஒட்டுமொத்த மௌனமும் கரிக்கட்டையாய் அங்கே கிடந்ததை உணரமுடிந்தது. முத்துக்குமாரின் ஈகச் சாவை, தமிழ்த் தீவிரவாதி என்று காவல்துறை திசை திருப்ப முயற்சிசெய்தபோது அந்த மருத்துவமனை வளாகமே தமிழ் உணர்வாளர்களால் கனன்றுகொண்டிருந்ததைக் கண்டுதான் காவல்துறை ஒதுங்கியது. ஆட்டுவித்துக்கொண்டிருந்த அன்றைய கருணாநிதி அரசும் மௌனித்தது. இளைஞர்களின் அதிவுயர் கோபம் கொளத்தூர் பகுதியை மட்டுமல்லாமல் சென்னையைத் திணறவைத்தது. முத்துக்குமாரின் வித்துடல் கொளத்தூரிலிருந்து மூலக்கொத்தளம் இடுகாட்டிற்குக் கொண்டுசெல்லப்பட்டபோது எத்தனை எத்தனை தடைகள், எத்தனை எத்தனை முழக்கங்கள், எத்தனை எத்தனை இளைஞர்களின் முகங்கள்... நெருப்பே முழக்கமிட்டுப் போவதுபோன்ற உணர்ச்சிப் பிழம்புகள்.
26 January 2012
![]() |
படம் நன்றி : ஜீனியர்விகடன் |
தமிழ்த் தேசியப் பெருந்தலைவர் என்று உலகத் தமிழர்களால் அழைக்கப்படும் மரியாதைக்குரிய அய்யா பழ.நெடுமாறன் அவர்களுக்கு வணக்கம். நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்; விரும்புகிறேன்.
‘கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனால் அங்க ரெண்டு கொடுமை அவுத்துப்போட்டு ஆடுச்சாம்’ என்ற கதையாக இந்துத்துவ-சாதியத்தை அடித்தளமாகக் கொண்ட இந்திய தேசிய கொள்கையிலிருந்தும் பார்ப்பனியக் கொள்கையிலிருந்தும் விடுபட்டு தமிழ்த்தேசியக் களத்திற்கு வந்தால் இங்கும் அதே கொடுமை தலைவிரித்தாடினால் என்ன செய்வதய்யா? அந்தக் கொடுமைகளை உங்களைப் போன்றவர்களும் முன்னெடுத்துச் செல்வதைப் பொறுக்க முடியாமல்தான், சமூகத்தின் கடைக்கோடியிலிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் விடுதலைச் சிறுத்தைகளில் ஒருவனாகவும் இருந்து தங்களுக்கு இந்த மடலை எழுதுகிறேன்.
உங்களைப் புண்படுத்தும் நோக்கத்துடனோ, அல்லது திட்டமிட்ட அரசியல் நோக்கத்துடனோ இம்மடலை தங்களுக்கு எழுதவில்லை. உங்களை, உங்களின் அரசியல் பயணத்தை மதிப்பவன் என்கிற உரிமையில் இந்த மடலை எழுதுகிறேன். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் எழுப்பும் எந்த கேள்விக்கும் உங்களால் பதில் சொல்லப்படுவதில்லை. ஒரே வார்த்தையில் அதை அவதூறு என்று சொல்லாமல் - மௌனமாக இருந்துவிட்டுச் செல்வீர்கள். முன்னர் எல்லா காலத்தையும் விட ஏராளமான இளைஞர்கள் இன்று தமிழ்த் தேசிய அரசியலில் ஈர்ப்பாகி அமைப்புகளுக்கு வருகிறார்கள். அவர்கள் இனியும் ஏமாறக்கூடாது என்பதாலேயே இதை எழுதுகிறேன்.
26 November 2011
பல்லவி
புதைகுழி
புதைகுழி
மாவீரர்
புதைகுழி
புதைகுழி
விதை குழி
விதை குழி
மீண்டெழும்
விதை குழி
விதை குழி
கரும்புலி
கரும்புலி
களமாடும்
கரும்புலி
கரும்புலி
பகையழி
பகையழி
வேரோடு
பகையழி
பகையழி
விதையயன விதையயன முளைப்போம்
பகைதனை பகைதனை முடிப்போம்
துயரினைத் துயரினைத் துடைப்போம்
விடுதலை விடுதலை படைப்போம் (புதை குழி)
சரணம் - 1
எங்களின் மாவீரர் கல்லறைகள் பேசும்
உலகத்தை உலுக்கியே மீண்டெழும் தேசம்
காந்தள் மலர்களின் வாசம் வீசும்
கடலும் வயலும் எம் வசமாகும்
இனியயன்ன
இனியயன்ன
சோகம்Š புலிகள்
இலட்சியப்
பாதையில்
வேகம்
ஒப்பாரி
ஓலங்கள்
போதும் Š இனி
தப்பாது
பகை தலை
சாயும் (புதைகுழி)
சரணம் - 2
வன்னி முல்லை நிலமெங்கும் வீரம்
விதையுண்ட உயிர்களும் கூடவே முழங்கும்
சிதறிய பனைகளும் துளிர்விட்டு முளைக்கும்
சீறியே புலி பாய்ந்து விழிரெண்டும் திறக்கும்
வெடித்தெழும்
வெடித்தெழும்
புரட்சி - மக்கள்
திரட்சியில்
தமிழீழ
ஆட்சி
பிரபாகரன்
எங்கள்
தலைமை - அந்தத்
தலைமைதான்
விடுதலைப்
புதுமை
- புலம்பெயர்ந்த தமிழர்களால் தயாரிக்கப்பட்டு இலண்டனில் 2011 மாவீரர் நாள் நிகழ்வில் வெளியிடவுள்ள இசைப்பேழைக்காக...
பாடல் - வன்னிஅரசு,
இசை - சாய்தர்சன்,
பாடியவர் - கிருஷ்ணராஜ்
25 September 2011
உங்கள் வீடு சாதி வெறியர்களால் கொளுத்தப் பட்டிருக்கிறதா? அந்தக் கொளுத்தப்பட்ட வீட்டிலிருந்து பாதி எரிந்தும் எரியாமலும் உள்ள துணிகளைப் பார்த்துக் கதறியிருக் கிறீர்களா? வீட்டில் இருந்த கொஞ்சம் அரிசியும் அந்த நெருப்பில் "கருகிப்'' போனதை முகர்ந்திருக்கிறீர்களா? எரிகின்ற சேரிச் சாம்பலுக்குள் கிடக்கிற 50 பைசா, 1 ரூபாய் பைசாக்களைத் தேடியிருக்கிறீர்களா?
ஒப்பாரியும் ஓலமுமாய் வழிந்தோடும் கண்ணீருடன் உங்கள் தாய் கதறுவதைப் பார்த்திருக்கிறீர்களா?
17 September 2011
“இனிமேல் என்னைத் தண்ணீர் குடிக்கச்சொல்லிக் கேட்கவேண்டாம்…… சரியோ?…… உண்ணாவிரதம் என்றால் என்ன? …… தண்ணீர், குளுக்கோஸ், இளநீர் எல்லாமே உணவுதான்…… இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம். ஆனால், அது உண்ணாவிரதம் இல்லை. உண்ணாவிரதம் என்றால் அதற்கு அர்த்தம் வேணும்… ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது…… இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல…… வயிறு முட்டக் குடித்துவிட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது.”
***
'நான் உமி கொண்டு வருகிறேன்; நீ அரிசி கொண்டு வா! இரண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடுவோம்!' என்கிற எனது கட்டுரைக்கு மறைமுகமாகப் பதில் சொல்ல முனைந்திருக்கிறார் யமுனா ராஜேந்திரன் அவர்கள். ஆனால் யமுனா ராஜேந்திரனுக்கு தமிழக அரசியல் இயக்கங்களின் அரிச்சுவடியோ, அதன் இயங்குதளம் குறித்த புரிதலோ இல்லை. அதனால்தான் அரசியல் இயக்கங்களின் ஒற்றுமையின்மையை அறிவுலகினரின் கையெழுத்து அறிக்கையோடு ஒப்பிடுகிறார். அநீக்கு எதிரான ஓர் அறிக்கையை எழுதி அதை இணையம் வழியே அனுப்பி வெவ்வேறு தத்துவார்த்தக் கோட்பாடுகளைக் கொண்ட முரண்பட்ட சிந்தனைவாதிகளிடம் கையெழுத்து வாங்குவதையும், வெகுசன மக்களிடையே அரசியல் செய்யும் அரசியல் அமைப்புகளின் கூட்டியக்கத்தையும் ஒன்றுபோலப் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாமல் எழுதியிருக்கிறார். அறிக்கைதான் ஒற்றுமையின் அடையாளம் என்றால் அந்த ஒற்றுமை அரை நூற்றாண்டு காலமாக தமிழக கட்சிகளிடையேயும், தமிழ் அமைப்புகளிடையேயும் உள்ளது என்று ஆணித்தரமாக சொல்வேன் யமுனாவுக்கு. ஏனென்றால் சம காலத்தில் நாம் எதிர்கொள்ளும் எல்லா நெருக்கடிகளிலும் எல்லா அரசியல் கட்சிகளுமே அவரவர் கண்டன அறிக்கையை வெளியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி கூட ஈழத் தமிழர் பிரச்சனையில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. யமுனாவின் அளவுகோலின்படி சுயநலம் துறந்த உயரிய நோக்கம் கொண்ட அரசியல் ஒன்றை அறிக்கைகளே தீர்மானிக்கும் என்றால் நான் சொல்வது சரிதானே?
16 September 2011
எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மக்கள் அனைவருக்கும் வணக்கம். நின்று கொண்டு பேச முடியாத நிலையில் இருப்பதால் இருந்து பேசுகிறேன். நாளை நான் சுயநினைவுடன் இருப்பேனோ என்று தெரியாது அதனால் இன்று உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன். நான் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம். 650 பேர் வரையில் இன்று வரை மரணித்துள்ளோம்.
15 September 2011
லெப் கேணல் திலீபன் வான் நல்லூர் கந்தசாமி கோயிலில் கீழ் வரும் ஐந்து காரங்களை முன்வைத்து 15.09.1987 அன்று சாகும்வரை உண்ணாநிலை அறப்போரை தொடங்கிய நாள் இன்று.
1. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றம், உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை "புனர்வாழ்வு" என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
4. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
5. இந்தியா அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள இராணுவ, காவல் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.
08 September 2011
“நான்
உமி கொண்டு வருகிறேன்!
நீ அரிசி கொண்டு வா!
இரண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடலாம்!
என்கிற கதையாகப் போய்க்கொண்டு இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனு இந்திய குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது முதலே தமிழ்நாட்டுத் தமிழர்களின் இரத்தம் சூடேறியது. தமிழீழ ஆதரவு இயக்கங்கள் தனித்தனியாகப் போராட்டங்களை நடத்தின.
விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் 19.8.2011 அன்று சென்னையிலும் 22.8.2011 அன்று தமிழ்நாடு முழுக்கவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதுமட்டுமல்லாமல் விடுதலைச் சிறுத்தைகளும் பா.ம.க.வும் இணைந்து தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் சார்பில் ‘மரணதண்டனை ஒழிப்பு மாநாடு' என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டை ஒருங்கிணைத்தன! மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.
உமி கொண்டு வருகிறேன்!
நீ அரிசி கொண்டு வா!
இரண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடலாம்!
என்கிற கதையாகப் போய்க்கொண்டு இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனு இந்திய குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது முதலே தமிழ்நாட்டுத் தமிழர்களின் இரத்தம் சூடேறியது. தமிழீழ ஆதரவு இயக்கங்கள் தனித்தனியாகப் போராட்டங்களை நடத்தின.
விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் 19.8.2011 அன்று சென்னையிலும் 22.8.2011 அன்று தமிழ்நாடு முழுக்கவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதுமட்டுமல்லாமல் விடுதலைச் சிறுத்தைகளும் பா.ம.க.வும் இணைந்து தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் சார்பில் ‘மரணதண்டனை ஒழிப்பு மாநாடு' என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டை ஒருங்கிணைத்தன! மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.
22 August 2011
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி துத்துக்குடி மாநகராட்சி அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் தமிழினிழன் தலைமையில் மாவட்ட செயலாளர் ஆறுமுக நாயனார் முன்னிலையில் நடைபெற்றது . அதில் மடிப்பாக்கம் ச . வெற்றிசெல்வன் , வன்னியரசு , முரசு தமிழப்பன் கண்டன உரையாற்றினார் . 100 கும் மேற்பட்ட தமிழ் ஆர்வாளர்கள் அதில் கலந்துகொண்டனர் .
சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஆர்ப்பாட்டம் இன்றுக காலை 11 மணிக்கு நடந்தது.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளார் தமிழரசு தலைமை தாங்கினார். சிவக்காசி ராஜா வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் கட்சியில் மாநில செய்தி தொடர்பாளர் வன்னியரசு கலந்துகொண்டு உறையாற்றினார்.
02 August 2011
கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க இரண்டு கொடுமை அம்மணமா ஆடுச்சாம்- இந்த கிராமப்புறத்துப் பழமொழி போல சில இணையத்தள வியாபாரிகள் ஈழத்தமிழர்கள் விடுதலைக்கு எதிராக கொடுமைபுரிந்து வருகிறார்கள். அதில் முன்னணியில் இருப்பவர்கள் ‘அதிர்வு’, ‘மீனகம்’ என்கிற இணையத்தள வியாபாரிகள். இந்த இணையத்தளங்களை ஆரம்பித்திருப்பதன் நோக்கம் என்ன? ‘விக்கிலீக்ஸ்’ போல சிங்கள இராணுவக் கொடுமைகளை அம்பலப்படுத்துவதற்காகவா? சிதறிக்கிடக்கிற விடுதலைப்புலிகளை ஒருங்கிணைக்கவா? தமிழின உணர்வாளர்களை ஒருங்கிணைக்கவா? எதுவுமே இல்லை. பின் எதற்காக ஆரம்பித்து இருக்கிறார்கள் என்று கோபப்படத்தான் தோன்றுகிறது.
தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிற ஈழத்தமிழ் இளைஞர்கள் சிலர் யுத்தத்திற்கு முன்பே வெளிநாடுகளில் செட்டிலாகிவிட்டார்கள். யுத்தக் களத்தில் சமராட அஞ்சி வெளிநாடுகளுக்கு ஓடி அங்கு குடியும் கூத்துமாய் வாழ்வைத் தொடர்ந்தார்கள். இப்போது அவர்கள் பொழுது போகாமல் தமிழகத்தில் உள்ள சில ஆதிக்கவாதிகளுக்கு எடுபிடிகளாய் இருந்து கொண்டு இணையத்தளங்களை நடத்துவதுதான் வேதனையிலும் வேதனை.
கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காகத் தமது வாழ்வை அர்ப்பணித்தவர். இந்த அர்ப்பணிப்புக்காகத்தான் 2002ஆம் ஆண்டு தமிழர் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் எழுச்சித் தமிழரை வன்னிக்கு அழைத்துப் பேசி தமிழகத்தில் விடுதலைச்சிறுத்தைகளின் பங்களிப்பைப் பாராட்டி அனுப்பி வைத்தார்.
31 July 2011
தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி இராஜபக்சே கும்பலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தமிழ்நாடெங்கும் 15 லட்சம் பேரிடம் கையயாப்பம் பெற்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மூலம் அய்.நா. அவைக்கு அனுப்பும் கையயாப்ப இயக்கத்தினை கடந்த சூலை 12 அன்று சென்னை, பத்திரிகையாளர் மன்றத்தில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தொடங்கிவைத்தார். இனப்படுகொலைக் குற்றவாளிகளுக்கு எதிரான விடுதலைச் சிறுத்தைகள் மூட்டிய இந்தத் தீ தமிழ்நாடெங்கும் மீண்டும் காட்டுத் தீயாய்ப் பரவிக்கொண்டிருக்கிறது.
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள், இயக்கப் பணிகள், இயக்கத் தோழர்களின் இல்ல நிகழ்ச்சிகள், சமச்சீர்க் கல்விக்கான ஆர்ப்பாட்டங்கள், நாடாளுமன்ற நடவடிக்கைகள் என்கிற தமது அன்றாடப் பணிகளுக்கிடையே நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்னை இலயோலா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, உயர்நீதிமன்ற வளாகம், கடைவீதிகள், இரயில் நிலைங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என எங்கெங்கு சென்றாலும் அங்கெல்லாம் கையயாப்பம் பெற்று இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்பது குறித்து மக்களிடையே விளக்கிப் பேசிவருகிறார். தலைவர் சூறாவளியாய்ச் சுற்றிக்கொண்டிருக்க தொண்டர்களும் அவரவர் வலிமைக்கேற்ப மாவட்டங்களில் கையயாப்ப இயக்கத்தினைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
30 July 2011
22.06.2011 குமுதம் இதழில்
இரத்தமும் சதையுமாக நம் சொந்தங்கள் தத்தளித்து நின்றபோது, சிங்கள அரசின் சிண்டைப் பிடித்தவர் அவர்(ஜெயலலிதா). எங்களின் இழவு வீட்டிற்கு ஆறுதல் சொல்ல வந்த உறவு. அவரை ஆதரித்ததில் என்ன தவறு?
- சீமான்
***
‘ஈழத்தாய்’ ஜெயலலிதாவால் தமிழீழம் கிடைக்கட்டும்!
வன்னிஅரசு, செய்தித் தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
பயங்கரப் பசியோடு உணவு விடுதிக்குச் சென்ற ஒருவன், முதலில் 5 தோசை ஆணையிட்டு சாப்பிட்டான் பசி தீரவில்லை. மீண்டும் 5 இட்லி சாப்பிட்ட பின்னும் பசி அடங்கவில்லை; பூரி சாப்பிட்டான் பசி தீரவில்லை... கடைசியாக ஒரு வடை சாப்பிட்டான். "அப்பாடா வயிறு நிறைந்துவிட்டது. நான் ஒரு முட்டாள். முதலிலேயே வடையை மட்டும் சாப்பிட்டிருந்தால் வயிறு நிறைந்து பசி போயிருக்குமே!" என்று தனக்குள் புலம்பினானாம். இதுபோல இருக்கிறது அண்ணன் சீமானின் கருத்து.
27 July 2011
ராஜபக்சேவை தண்டிக்க முடியும்! அனைத்துலக சமூகத்தின் ஆதரவை வலுப்படுத்துவோம்! திருமா வேண்டுகோள்!
அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகார குழு சிங்கள இனவெறி அரசுக்கு வழங்கி வந்த நிதி உதவினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதென முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகியுள்ளது. இனப்படுகொலை குற்றவாளிகள் இராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகளாக விசாரிப்பதற்கு அழுத்தம் கொடுக்கிறவகையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
மனிதநேய அடிப்படையிலான நிதியுதவியை தொடர்ந்து வழங்குவதென்றும் போர் குற்றங்களை விசாரிப்பதற்கு இராஜபக்சே கும்பல் உடன்பட்டால் பிற நிதியுதவிகளையும் வழங்குவதென்றும் அந்த குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த அறிவிப்பின் மூலம் சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான மனநிலை அனைத்துலக சமூகத்திடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மனிதநேய அடிப்படையிலான நிதியுதவியை தொடர்ந்து வழங்குவதென்றும் போர் குற்றங்களை விசாரிப்பதற்கு இராஜபக்சே கும்பல் உடன்பட்டால் பிற நிதியுதவிகளையும் வழங்குவதென்றும் அந்த குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த அறிவிப்பின் மூலம் சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான மனநிலை அனைத்துலக சமூகத்திடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
26 July 2011
25 July 2011
இனப்படுகொலை குற்றவாளி இராஜபக்சேவுக்கு தண்டனை வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் கையொப்ப இயக்க பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று திரைப்பட கலைஞர்கள் இயக்குனர் மணிவண்ணன், செல்வமணி & ரோஜா , நடிகர் சத்தியராஜ் ஆகியோரிடம் கையொப்பங்கள் பெறப்பட்டன. ஆர்வமுடன் அனைவரும் கையெழுத்திட்டனர்.
ஆனால் திருவல்லிக்கேணியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயிடம் கையெழுத்து வாங்க சென்றபோது அவர் தனக்கு இதில் ஆர்வமில்லை என கூறி கையெழுத்திட மறுத்துவிட்டார்.
04 February 2011
03 February 2011

- வன்னிஅரசு
""உயரிய நோக்கத்திற்காக பயணித்துக் கொண்டிருக்கும் நம்மை துரோகிகளும் எதிரிகளும் திசைமாற்ற நினைப்பார்கள். அவற்றையயல்லாம் புறந்தள்ளிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தால்தான் இலக்கை அடைய முடியும்!''மேதகு பிரபாகரனின் இந்தச் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு விடுதலைச் சிறுத்தைகள் பயணித்துக்கொண்டிருக்கிறது. சாதியற்ற தமிழ்த்தேசம் படைக்க தமிழ்நாட்டில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகளாய் களமாடிக் கொண்டிருக்கிறோம்.
Subscribe to:
Posts (Atom)