17 September 2011

லெப் கேணல் திலீபன் உண்ணாநிலை அறப்போர் - மூன்றாம் நாள்


“இனிமேல் என்னைத் தண்ணீர் குடிக்கச்சொல்லிக் கேட்கவேண்டாம்…… சரியோ?…… உண்ணாவிரதம் என்றால் என்ன? …… தண்ணீர், குளுக்கோஸ், இளநீர் எல்லாமே உணவுதான்…… இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம். ஆனால், அது உண்ணாவிரதம் இல்லை. உண்ணாவிரதம் என்றால் அதற்கு அர்த்தம் வேணும்… ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது…… இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல…… வயிறு முட்டக் குடித்துவிட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது.”


***

நேரடியாக மோதிக் களம் காண்கிற 'கபடி' அரசியல்தான் சிறுத்தைகளுக்குத் தெரியும்!


'நான் உமி கொண்டு வருகிறேன்; நீ அரிசி கொண்டு வா! இரண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடுவோம்!' என்கிற எனது கட்டுரைக்கு மறைமுகமாகப் பதில் சொல்ல முனைந்திருக்கிறார் யமுனா ராஜேந்திரன் அவர்கள்.  ஆனால் யமுனா ராஜேந்திரனுக்கு தமிழக அரசியல் இயக்கங்களின் அரிச்சுவடியோ, அதன் இயங்குதளம் குறித்த புரிதலோ இல்லை. அதனால்தான் அரசியல் இயக்கங்களின் ஒற்றுமையின்மையை அறிவுலகினரின் கையெழுத்து அறிக்கையோடு ஒப்பிடுகிறார்.  அநீக்கு எதிரான ஓர் அறிக்கையை எழுதி அதை இணையம் வழியே அனுப்பி வெவ்வேறு தத்துவார்த்தக் கோட்பாடுகளைக் கொண்ட முரண்பட்ட சிந்தனைவாதிகளிடம் கையெழுத்து வாங்குவதையும், வெகுசன மக்களிடையே அரசியல் செய்யும் அரசியல் அமைப்புகளின் கூட்டியக்கத்தையும் ஒன்றுபோலப் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாமல் எழுதியிருக்கிறார். அறிக்கைதான் ஒற்றுமையின் அடையாளம் என்றால் அந்த ஒற்றுமை அரை நூற்றாண்டு காலமாக தமிழக கட்சிகளிடையேயும், தமிழ் அமைப்புகளிடையேயும் உள்ளது என்று ஆணித்தரமாக சொல்வேன் யமுனாவுக்கு.  ஏனென்றால் சம காலத்தில் நாம் எதிர்கொள்ளும் எல்லா நெருக்கடிகளிலும் எல்லா அரசியல் கட்சிகளுமே அவரவர் கண்டன அறிக்கையை வெளியிடுகின்றன.  காங்கிரஸ் கட்சி கூட ஈழத் தமிழர் பிரச்சனையில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. யமுனாவின் அளவுகோலின்படி சுயநலம் துறந்த உயரிய நோக்கம் கொண்ட அரசியல் ஒன்றை அறிக்கைகளே தீர்மானிக்கும் என்றால் நான் சொல்வது சரிதானே?


16 September 2011

லெப் கேணல் திலீபன் உண்ணாநிலை அறப்போர் - இரண்டாம் நாள் உரை


னது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மக்கள் அனைவருக்கும் வணக்கம். நின்று கொண்டு பேச முடியாத நிலையில் இருப்பதால் இருந்து பேசுகிறேன். நாளை நான் சுயநினைவுடன் இருப்பேனோ என்று தெரியாது அதனால் இன்று உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன். நான் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம். 650 பேர் வரையில் இன்று வரை மரணித்துள்ளோம்.

15 September 2011

லெப் கேணல் திலீபன் உண்ணாநிலை அறப்போரை தொடங்கினார்


லெப் கேணல் திலீபன் வான் நல்லூர் கந்தசாமி கோயிலில் கீழ் வரும் ஐந்து காரங்களை முன்வைத்து 15.09.1987 அன்று சாகும்வரை உண்ணாநிலை அறப்போரை தொடங்கிய நாள் இன்று. 


1. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.

2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றம், உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை "புனர்வாழ்வு" என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

4. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

5. இந்தியா அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள இராணுவ, காவல் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.