19 January 2012

தமிழகத்தில் நடப்பது சண்டிராணி ஜெயலலிதா அரசா? மலையாள வெறியன் உம்மன்சாண்டி அரசா?


அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  நஞ்சு கொடுத்துக் கொல்லப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  கழுத்தை நெறித்துக் கொலை செய்வதைப்  படித்திருப்போம். ஆனால் கொதிக்க வைத்த வெந்நீரை ஊற்றிக் கொலை செய்யப்படுவதை இப்போதுதான் தமிழகம் கேள்விப்பட்டிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்தவர்  சாந்தவேல்.  மனைவி சித்ரா, பெண் குழந்தைகள் தட்சனா, சஞ்சனாவுடன் தானுண்டு, தனது பிளம்பர் வேலையுண்டு என்று வாழ்ந்து வந்தார்.  ஒவ்வோர் ஆண்டும் சபரிமலை சென்று அய்யப்பனை வழிபடுவதையும் மற்றொரு முக்கிய வேலையாகக் கொண்டிருந்தார். 


வழக்கம் போல, கடந்த 6-1-2012 அன்று முகப்பேரில் உள்ள சந்திரசாமி என்கிற மலையாளி (இவர்தான் போன குழுவிற்கு குரு சாமி) தலைமையில் சாந்தவேல் உள்பட 80 பேர் சபரி மலைக்குப் பயணமானார்கள்.  போனவர்களிடமிருந்து சாந்தவேல் மனைவி சித்ராவுக்கு ஒரு தொலைபேசி வந்தது.  அதில் சாந்தவேல் மிக சீரியசாக கோட்டயம் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வருகிறது.  அதிர்ச்சியடைந்த சித்ரா, தனது அக்காள் உண்ணாமலையையும் கணவர் வழி உறவினரான பலராமனையும் அழைத்துக்கொண்டு கோட்டயம் விரைகிறார்.

அங்கே மருத்துவமனையில் சாந்தவேலுவைப் பார்த்தபோது, அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர் சாந்தா உள்ளிட்டோர்.  சாந்தவேலு உடலின் பின்பகுதி முழுவதும் வெந்துபோய் மிகவும் கோரமாக, கேட்பாரற்றுக் கிடந்துள்ளார்.

நடந்தது என்ன என்று விசாரித்தபோது, பம்பாவிலுள்ள ஒரு தேநீர்க் கடை  முன்பு சாந்தவேல் தமிழில் பேசினார் என்பதற்காகவே அக்கடை நடத்தும் மலையாளி, கொதித்துப்போய் சாந்தவேலுடன் சண்டைக்குப் போயுள்ளார். உடன் வந்தவர்கள் சமாதானப்படுத்திவிட்டுத் திரும்பும்போது, அந்த மலையாளி, பாய்லரில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை சாந்தவேலின் பின்பக்கம் ஊற்றி தனது மலையாள வெறியைத் தணித்துள்ளார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சாந்தவேலுவை சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தும் பயனில்லாமல் 15-1-2012 அன்று அதிகாலை 3 மணியளவில் மரணமடைந்துள்ளார்.  சாந்தவேல் உடல் திருவேற்காட்டிலுள்ள திருவேங்கடத்திற்கு கொண்டு செல்வதற்கே 16ந்தேதி மாலையாகிவிட்டது.

இச்செய்தியை பாவலரேறு பாசறையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாவேந்தன்  அனைத்துத் தமிழ் உணர்வாளர்களிடமும் கொண்டு செல்கிறார்.  செய்தியைக் கேள்விப்பட்டு சாந்தவேலு வீட்டிற்கு சென்ற காவல்துறை துணை ஆணையர்  ஐயப்பன் சாந்தவேலு குடும்பத்தினரை மிரட்டி உடனடியாக சாந்தவேலு உடலை அடக்கம் செய்ய வற்புறுத்துகிறார்.

17ந் தேதி தமிழுணர்வாளர்கள் திருவேற்காட்டை முற்றுகையிட ஆரம்பித்த பின்புதான் காவல்துறை ஒதுங்க ஆரம்பித்தது.

18-1-2012 அன்று காலை விடுதலைச் சிறுத்தைகளின் மாவட்டச் செயலாளர்  பாலசிங்கம் அவர்களோடு, மாநில நிர்வாகிகள் வன்னிஅரசு, தகடூர் தமிழ்ச்செல்வன், தென்சென்னை மாவட்ட செய்தித் தொடர்பாளர் இர.செந்தில் ஆகியோர் 100க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகளுடன் படுகொலைக்குள்ளான சாந்தவேலுவுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.  முன்னதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் கூட்டத்தை ஒருங்கிணைப்பு செய்துகொண்டிருந்தார்.

மக்கள் திரள் அதிகமாகவே காவல்துறை அதிகாரிகளும், கோட்டாட்சியரும்  பேச்சுவார்த்தை என்கிற பெயரில் சாந்தவேலுவை அடக்கம் செய்ய வற்புறுத்தினர்.  ஆனால், மலையாளிகளால் படுகொலை செய்யப்பட்ட சாந்தவேலுவின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூபாய் 10 இலட்சம் இழப்பீடும், அரசு வேலைவாய்ப்பும், அத்துடன் கொலையாளிகளான மலையாளிகளையும், தமிழகத்திலிருந்து சாந்தவேலுவை அழைத்துச் சென்ற சந்திரசாமியையும் கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து தமிழுணர்வாளர்கள் போராடினர். போராட்டக்குழுவின் கோரிக்கையை காவல்துறை வழக்கம்போலப் புறந்தள்ளியது.  இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து, செய்வதறியாது திரும்பிய காவல்துறை, கூடிப் பேசி வழக்கமான சதி ஆலோசனையில் ஈடுபட்டது.

மாலை 3 மணியளவில் காக்கிச்சட்டைகள் பெரிய பெரிய லத்திகளுடன் திருவேங்கடம் பகுதியைச் சுற்றி வளைத்தது.  சாந்தவேலுவின் உடலைச் சுற்றி அமர்ந்திருந்த அனைத்துத் தோழர்களையும் கையைப் பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர்.

விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த வன்னிஅரசு, பாலசிங்கம், இர.செந்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தது.  அதே வேளையில் சாந்தவேலுவின் மனைவி, குழந்தைகளை நெட்டித் தள்ளிவிட்டு சாந்தவேலு உடலை அடக்கம் செய்ய எடுத்துப்போய், புதைக்காமல் எரியூட்டியது போலீஸ் கும்பல்.

முல்லைப் பெரியாறுச் சிக்கலில் இந்திய காங்கிரஸ் அரசு மலையாளிகளுக்கு ஆதரவாக இருப்பதிலிருந்தே, இது மன்மோகன் சிங் அரசு அல்ல; மலையாளிகளின் அரசு என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.  இப்போது ஆள்கின்ற ஜெயலலிதா, இது ஜெயலலிதா அரசு அல்ல; உம்மன் சாண்டியின் அரசுதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நாகரிக உலகில் சாந்தவேலுவின் உடலை ஒரு மரியாதையாக அடக்கம் செய்யக்கூட அனுமதிக்காத ஜெயலலிதாவின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டு நாம் அதிர்ச்சியடையத் தேவையில்லை.  ஏனென்றால் பாம்பு எத்தனை முறை தோலை உரித்துப் போட்டுவிட்டு முன்பு மாதிரி நான் இல்லை என்று  சொன்னாலும், அதன் குணம் மாறுவதில்லை.  அதைப் போலத்தான் சண்டிராணி ஜெயலலிதாவும்.  சாந்தவேலு கொல்லப்பட்டதை அறிந்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி நனைந்துபோன ஐம்பது ரூபாய் நோட்டை பாய்லரில் காய வைத்தபோது தவறுதலாக வெந்நீர் பட்டுவிட்டது என்று மலையாளிகளைக் காக்கும் வகையில் அறிக்கை விடுகிறார்.  ஆனால் ஜெயலலிதாவோ கொல்லப்பட்ட சாந்தவேலுக்கு ஓர் இரங்கல்  அறிக்கைகூடத் தெரிவிக்கவில்லை.  நட்ட ஈடு வழங்கவில்லை.  கேரளாவை ஆள்கின்ற காங்கிரஸ் அரசைக் கண்டிக்கக்கூட முன்வரவில்லை.  இதையெல்லாம் செய்யாவிட்டாலும்கூடப் பரவாயில்லை.  மரியாதையாக நல்லடக்கம் செய்யவாவது அனுமதித்திருக்கலாம். ஆனால், உம்மன்சாண்டியைவிட ஒருபடி மேலேபோய் சாந்தவேலுவின் உடலை இழுத்துப்போய்  அவசர அவசரமாக எரித்ததன் மூலம் இந்திய  இறையாண்மையையும் சேர்த்து எரித்திருக்கிறார்கள்.

எரிக்கப்பட்ட அந்தத் தீயில் இந்திய ஒற்றுமை தேசியக் கொடியாய்  கொழுந்துவிட்டுப் பறக்கிறது.  தமிழர்களின் மௌனத்தையும் இந்த நெருப்பு சுட்டுப்பொசுக்கட்டும்.

1 comments:

லியோ said...

கடலூரில் தானே புயலுக்குக் கூட பெயரளவில் ஹெலிகாப்டர் விசிட் செய்து தன் கடமையை முடித்துக் கொண்ட ஜெ., இப்போது அப்படி ஒரு நாடகத்தைக் கூட அரங்கேற்றாதது, இளிச்சவாய தமிழர்களின் மௌனத்தினால் தான்! பெரும்பான்மை அரசு என்று கர்வப்போக்கை கைவிட்டு, அது மக்களிட்டப் பிச்சை என்பதை அவர் உணர வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்த போது, எந்தவொரு மக்கள் போராட்டத்தையும் முன்னெடுக்காமல் கோடநாட்டில் ஓய்வெடுத்த ஜெயலலிதாவை மக்கள் முதல்வராக்கியது அவர் மீதான நம்பிக்கையினால் அல்ல, கருணாநிதி வகையறாக்களின் மீதான வெறுப்பினால் தான். ஆனால் நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும்,... என்ற மொழியைத்தான் அவர் தனது செயல்களால் மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்தி வருகிறார்.

Post a Comment