20 September 2011

'நம்புங்கய்யா... நானும் ரவுடிதான்!'

cartoon bala
'அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுத்தி அம்பத்திரண்டு அரிவாளாம்!' - ஊரையும் மரத்தையும் சுற்றித் திரிகிற ஒன்றுக்கும் உதவாத ஊதாரிகளைப் பார்த்து ஊர்ப் பெரிசுகள் இப்படித்தான் கிண்டலிப்பார்கள்.  சுருக்கமாக 'கைப்புள்ள வடிவேலு'வைப் போன்ற கேரக்டர்களைத்தான் இப்படிச் சொல்வார்கள்.

தமிழக அரசியலிலும் ஒரு கைப்புள்ள சுற்றிக்கொண்டு திரிகிறார்.  அவர்தான் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!  காங்கிரஸ் கட்சி ஏதோ தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்கவே முடியாத கட்சி போலவும், எல்லா கட்சிகளும் காங்கிரஸ் வந்தால்தான் ஜெயிக்கவே முடியும் என்று கெஞ்சுவது போலவும் இளங்கோவன் உதார் விட்டுக்கொண்டு திரிகிறார்.  கைவிலங்கு உடைஞ்சதாகவும், விடுதலை அடைந்து விட்டதாகவும், தனித்துப் போட்டியிடப் போவதாகவும் உளறிக்கொண்டு திரிகிறார்.  ஏதோ தனித்துப் போட்டியிட்டு 10 மாநகராட்சிகளையும், 152 நகராட்சிகளையும், ஒட்டுமொத்த ஊராட்சிகளையும் கைப்பற்றுவது போல காமெடி செய்து வருகிறார்.
பெருந்தலைவர் காமராசருக்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியலில் குட்டிக்கரணம் போட்டுக்கொண்டு பூம்பூம் மாட்டுக்காரனைப் போல திராவிடக் கட்சிகளின் வாசலில் நின்று, கொடுப்பதை வாங்கிக்கொண்டு போகும் இந்தக் காங்கிரசுக் கோமாளிகளின் எகத்தாளத்தையும், லொள்ளுவையும் தாங்க முடியலடா சாமி!  மாறி மாறி திராவிடக் கட்சிகளின் முதுகில் ஏறியே பயணப்பட்ட ஒட்டுண்ணிகள்தான் இன்றைக்குத் தனித்துப் போட்டியென சத்தியமூர்த்திபவனில் வடிவேலு காமெடியைப் போல செத்து செத்து விளையாடத் தயாராகி விட்டார்கள்.

தமிழகத்து உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் என்றைக்குமே குரல் கொடுக்காத காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டிலிருந்து ஓரங்கட்டி எவ்வளவோ காலமாகிவிட்டது.  பா.ஜ.க. என்கிற வெளிப்படையான மதவெறிக் கட்சிக்கு மாற்றாக, மறைமுகமான மதவெறிக் கட்சியான காங்கிரசை வேறு வழியில்லாமல் மத்தியில் ஆதரிக்க வேண்டிய இக்கட்டான நிலையில், பல மாநிலக் கட்சிகள் இந்தச் சனியனை அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஒரே கட்சி காங்கிரஸ்தான்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் து£க்குத்தண்டனை ரத்து செய்யக்கோரி தமிழகமே கொதித்தெழுந்து போராடிக் கொண்டிருக்கும்போது மூவரையும் து£க்கில்போட வேண்டும் என்று, சொன்னதோடு மூவரையும் சிறைக்குள்ளேயே நுழைந்து கொன்று போட்டிருக்க வேண்டும் என்று பொறுக்கிக் கும்பலின் தலைவன் போல பேசிய புடுங்கிதான் இளங்கோவன்.

பரமக்குடியில் 7 தலித்துகள் போலிஸ் நாய்களால் குதறிக் கொல்லப்பட்ட கொடுமைகளைக் கண்டித்து பா.ஜ.க.கூட போராட்டம் நடத்தியது.  ஆனால் இந்த காங்கிரஸ் ஜந்துக்கள் ஒருவர் கூட இதுவரை அதனைக் கண்டித்துக்கூட அறிக்கை கொடுக்கவில்லை.  1956ஆம் ஆண்டு தலித்துகள் தேர்தல் நேரத்தில் காமராசரை ஆதரித்த ஒரே காரணத்துக்காகத்தான் முத்துராமலிங்கத் தேவரும் அவரது ஆதரவாளர்களும் சாதிவெறியுடன் இம்மானுவேல் சேகரனை வெட்டிக்கொன்றார்கள்.  காங்கிரஸ் ஆட்சியிலிருந்து அன்றைக்கு காவல்துறை கலவரத்தை அடக்க கீழத்து£வல் கிராமத்தில் கலவரத்தில் ஈடுபட்ட முத்துராமலிங்கத் தேவர் ஆதரவாளர்களைச் சுட்டுக்கொன்றனர்.  அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு அதே காவல்துறையை வைத்து தலித்துகளைச் சுட்டுக்கொன்று பழி தீர்க்கின்றனர்.  அன்றைக்கு முத்துராமலிங்கத் தேவரை கைது செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக அறிக்கை விட்டவர் தந்தை பெரியார்.  இன்றைக்கு தலித்துகளுக்கு எதிராகச் செயல்பட்டு காவல்துறைக்கு ஆதரவாக ஜால்ரா போடுபவர் பெரியாரின் பேரன் இளங்கோவன்.

அது  மட்டுமல்ல, சிறைக்குள் புகுந்து பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை கொலை செய்ய வேண்டும் என்று பேசுகிற, கொலைவெறி உணர்வுள்ள இளங்கோவனுக்கு 7 தலித்துகள் கொல்லப்படுவதை ஞாயப்படுத்தத்தானே முடியும்.  இக்கொடூர மனநிலையிலிருந்துதான் காங்கிரஸ்காரர்கள் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் மக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறார்கள்.  போராடும் மக்களுக்கு ஆதரவாகவோ, அப்போராட்டத்தில் பங்கெடுக்கவோ கூட மனமில்லாத காங்கிரஸ்காரர்களின் மக்கள் விரோதப் போக்கு தமிழகத்தில் பல்வேறு குரலாய், வடிவமாய் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

தமிழர்களின் உரிமைகளான முல்லைப் பெரியாறு பிரச்சனையாகட்டும், காவிரிப் பிரச்சனையாகட்டும், கண்ணகி கோயில் பிரச்சனையாகட்டும், தலித்துகள் பிரச்சனையாகட்டும், எந்த உரிமைகளுக்கும் குரல்கொடுக்காத ஊமையர்கள்தான் இந்தக் காங்கிரஸ் கொள்ளையர்கள்.  ஆனால் தமிழகத்தை மட்டும் மீண்டும் ஆள வேண்டும் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலையும் நாயைப் போல காங்கிரஸ்காரர்கள் அலைகிறார்கள்.

தமிழர்களின் உரிமைகளுக்கும் பண்பாட்டுக்கும் எதிராகச் செயல்படும் இளங்கோவன் போன்ற தேசபக்திச் செம்மல்களை தேர்தல் களத்தில் வீழ்த்திய பிறகும் இன்னமும் திருந்தியபாடில்லை.  மக்கள் புறக்கணித்து வீழ்த்துக் கட்டிய பிறகும் வடிவேலு ஒரு படத்தில் கூறவது போல 'யோவ் நானும் ரவுடின்னு ஃபார்ம் ஆயிட்டேன்.  நானும் ரவுடிதான்யா... நம்புங்கய்யா...' என்று இளங்கோவன் போன்ற காங்கிரஸ்காரர்கள் சொல்லித் திரிகிறார்கள்... பாவம்!

0 comments:

Post a Comment