04 February 2011
ஈழத்தில் போரை நிறுத்த வலியுறுத்தி எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் சனவரி15ஆம் நாள் உண்ணாநிலை அறப்போரை மறைமலைநகரில் தொடங்கிய அந்த எழுச்சிநாளில் மேடைக்கு அருகிலேயே நின்றிருந்தான் தம்பி முத்துக்குமார்.
“வன்னிஅரசண்ணா அண்ணன உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லுங்க நான் சாகிறேன்”என்றான்.
தம்பி முத்துக்குமாரின் கொதிப்பும் உணர்வும் உண்ணாநிலை மேடையைச் சுற்றிசுற்றி வரச்செய்திருந்தது. காலையில் முத்துக்குமாரைப் பார்த்துவிட்டு ‘தமிழ்மண் நாளிதழ்’தொடர்பான வேலைக்காகவும், தலைவர் கட்டளையிட்ட பல்வேறு பணிகளுக்காகவும் நான் சுற்றித் திரிந்து விட்டு மீண்டும் இரவு 11 மணியளவில் உண்ணாநிலை மேடைக்கு வந்த போது மேடைக்குக் கொஞ்சம் நெருக்கமாக முத்துக்குமார் அமர்ந் திருந்தான். என்னைப் பார்த்தவுடன், “அண்ணே தொடர்ச்சியா ஈழ விடுதலைக்காக அண்ணன் எல்லா போராட்டங்களும் நடத்தி முடிச்சுட்டாரு. இப்ப சாகப் போறேன்னு அறிவிச்சுட்டாரு. இனிமே நாமெல்லாம் எதுக் கண்ணே உசுரோடு இருக்கணும். எதையாவது செய்யப் போறேண்ணே”அந்த குளிர் இரவிலும் முத்துக் குமாரின் பேச்சு நெருப்பை கக்கியது.
தோழர் முத்துக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் அலுவலகமான ‘தமிழ் மண்’ணுக்கு அடிக்கடி வருவார். ‘தமிழ்மண்’ இதழை வாங்கிச் சென்று படித்துவிட்டு விமர்சனம் சொல்வார்.
ஒருமுறை முத்துக்குமார் என் னோடு பேசிக்கொண்டிருக்கும் போது தலைவர் திடீரென அலுவல கத்திற்குள் வர, உடனடியாக முத்துக்குமார் “தலைவர் வருகிறார்” என்று வணக்கம் சொல்லியவாறே எழுந்தார். முத்துக்குமார் விடுதலைச்சிறுத்தைகள் உறுப்பினர் அல்ல. ஆனால், பேசும் போதெல்லாம் விடுதலைச்சிறுத்தைகளாய் இருக்கும் தம்பிகள் கூறுவது போல ‘அண்ணே’ என்றுதான் தலைவரை அழைப்பார். “எனக்கு ஒரே ஆசை ஈழத்துல அண்ணன் பிரபாகரனோட புகைப்படம் எடுக்கணும். தமிழ்நாட்டுல அண்ணன் திருமாவளவன் அருகில் நின்று புகைப்படம் எடுக்கணும். இவங்கதான் உண்மையான போராளித் தலைவர்கள்” என்று முத்துக்குமார் சொல்லும் போதெல்லாம் எனக்குப் பெருமையாக இருந்தது.
அன்றைக்கும் அப்படித்தான் தம்பி முத்துக்குமார், உண்ணாநிலை அறப்போர் மேடையில் தலைவரை பார்த்துக்கொண்டே அந்தக் கொட்டும் குளிரில் நாற்காலியில் உட்கார்ந்தவாறே தூங்கிப் போனான். மறுநாள் காலையும் முத்துக்குமார் அங்கேதான் இருந்தான். எழுச்சித் தமிழர் நடத்தும் ஈழ விடுதலைக்கான அத்தனை போராட்டங்களிலும் முத்துக் குமார் எங்காவது ஒரு மூலையில் நின்றிருந்து கவனித்து விட்டுச் செல்வான். நான்காவது நாள் காலை நான் ‘தமிழ்மண் நாளிதழை’ அவனிடம் நீட்டும் போது அந்த இதழை வாங்க மறுத்தான். எதுவும் பேசாமலே சென்றுவிட்டான்.
இறுதியில் சனவரி 29 அன்று சென்னை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில்தான் முத்துக் குமாரைப் பார்த்தேன். எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்துக் கரும் புலி தம்பி முத்துக்குமார்” என்று கூறினார். அந்தளவுக்கு ஒரு கரும் புலியாய் தமிழகத்தில் வெடித்து விடுதலை நெருப்பை பரவ விட்டிருக்கிறார்.
முத்துக்குமாரின் வீரச்சாவு எழுச்சித் தமிழரைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சனவரி 31ஆம் நாள் கொளத்தூரிலிருந்து முத்துக்குமாரின் வித்துடல் மூலக் கொத்தளம் சுடுகாட்டுக்குக் கொண்டு செல்லும்வரை எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் 9 மணி நேரம் நடந்தே சென்று வீரவணக்க முழக்கமிட்டது முத்துக் குமாரின் தியாகத்திற்கு செலுத்திய மரியாதையாகும்.
முத்துக்குமார் சாகிற தறுவாயில் உடல் முற்றும் எரிந்த நிலையில் காவல்துறையும் பொது மக்களும் ஒரு சில செய்தியாளர் களும் கூடி எதற்காக இப்படி உன் னையே எரித்துக் கொண்டாய் என்று கேட்டபோது, ஈழத்தில் தினமும் என் சொந்தங்கள் எரிந்து கொண்டிருக்கிறார்களே, அதற்கா கத்தான்” என்றான். வழக்கம் போல் காவல்துறை, “சரி, உன் சொந்தக்காரர்கள் யார்? முகவரி சொல்லு?” என்று கேட்டபோது யாருமே எதிர்பார்க்காத சொந்தக் காரர்களை சொல்லி அதிர்ச்சி யடைய வைத்தான்.
“எனது சாவை அண்ணன் பிரபாகரனிடத்திலும், அண்ணன் திருமாவளவனிடத்திலும் உடனடியாக தெரிவியுங்கள்” இந்தச் சொந்தக்காரர்களை இறுதியாக உச்சரித்துவிட்டு முத்துக்குமார் சாகிறான். இப்படி வாக்கு மூலத்தில் சொல்லியிருப்பது தமிழகத்தின் நிகழ்கால நம்பிக் கையாக மட்டு மல்ல; எதிர்கால நம்பிக்கையாகவும் எழுச்சித் தமிழர் இருப்பதைத்தான் முத்துக் குமார் அறிவித்துள்ளான்.
பள்ளப்பட்டி ரவி கடந்த 1.2.2009 அன்று ஈழத்தில் போரை நிறுத்த வலியுறுத்தி தீக்குளித்து இறந்து போகிறார். மருத்துவ மனையில் சாகிறதறுவாயில் கூட கடைசி ஆசையாக, “நான் தலைவர் திருமாவளவனோடு தொலைபேசியில் பேசவேண்டும்” என்று சொல்லி தலைவரிடம் பேசிவிட்டுத்தான் இறந்து போனார்.
2ஆம் நாள் மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து ரவியின் வித்துடல் தத்தனேரி சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. எழுச்சித் தமிழர் வீரவணக்க முழக்க மிட்ட வாறே நடந்து வந்தார்.
விருதுநகர் கோகுலரத்னம் கடந்த 25.2.2009 அன்று ஈழவிடு தலைக்காய் தன்னையே நெருப்பு வைத்து வீரச்சாவடைந்தார். கோகுலரத்னம் தி.மு.க. உறுப் பினராக இருந்தபோதிலும் அவர் சாகும்முன் எழுதிய கடிதத்தில், “தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்க என்று ஆரம்பித்து டாக்டர் கலைஞருக்கு வேண்டுகோளாய், திருமாவளவனை கைது செய்யாதே! வைகோவை கைது செய்யாதே! நெடுமாறனை கைது செய்யாதே! ராமதாசை கைது செய்யாதே” என்று தன் கைப்பட எழுதியிருந்தார்.
வீரச்சாவடைந்த இம்மூவரும் விடுதலைச்சிறுத்தைகளின் உறுப்பினர்கள் அல்ல. ஆனால்,இம் மூன்று கரும்புலிகளும் எழுச்சித் தமிழர் மீது கொண்டுள்ள நம்பிக்கை சாதாரணமானதல்ல. சாகிறபோது கூட தன் பிள்ளை, அம்மா, மனைவியிடம் பேச ஆசைப்படாமல் திருமாவளவனிடம் பேச ஆசைப் பட்டுள்ளார்கள் என்றால் எந்தளவுக்கு தமிழகத்து விடுதலைக்கு உண்மையாய் எழுச்சித்தமிழர் களமாடுகிறார் என்பது தெரியும்.
தம்பி முத்துக்குமார் எழுச்சித் தமிழரோடு புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டார். ஆனால்,முத்துக் குமாரின் ஆசை நிறைவேறாமலே போய்விட்டது. ஆனால், முத்துக் குமாரின் ஈழவிடுதலை வேட்கை எழுச்சித்தமிழர் மூலம் தமிழ கத்தில் நெருப்பாய்ப் பற்றி எரிந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது வீரச்சாவடைந்த தமிழகத்துப் போராளிகளின் தியாகம் கண்டிப் பாக வீண்போக வில்லைதான்.
மார்ச் 2009, தமிழ்மண்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment