10 August 2014
அம்பேத்கரின் கொள்கைகளை பரப்புவதற்காகவும் செயல்படுவதற்காகவும் ஒர் மாமேதை தோன்றி இருக்கிறார். தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திணிக்கப்படும் வன்கொடுமைகளை கண்டு தினம் தினம் வேதனைபட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வேதனையிலேயே சாப்பிடகூட முடியாமல் எலும்பும் தோலுமாய் தேயிந்து போய் விட்டார். படுத்தால் தூக்கம் வருவதில்லை. எந்த செயலும் செய்ய முடியாமல் பாவம் பித்து பிடித்ததுபோல் 'அம்பேத்கர்' 'அம்பேத்கர்' என்று அலைந்து கொண்டிருக்கிறார். அந்த மாமேதை யார் தெரியுமா? திரைபட இயக்குனர் தங்கர் பச்சான் தான். தலித்துகளின் விடுதலைக்காக கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தன்னை அர்பணித்துக் கொண்ட மாமேதை தங்கர் பச்சான் ரொம்பவும் கொதித்து போய்தான் இருக்கிறார். தாழ்தப்பட்ட மக்கள் கொடுமைக்குள்ளாக்கப்படுவது தெரிந்தால் உடனே அங்கே ஆஜராகிவிடுகிறார்.
இந்த நிலையில் திடீரென இளவரசன் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்த தங்கர் பச்சான், இளவரன் உடல் கிடந்த ரயில் இருப்பு பாதைக்கே சென்று ஒப்பாரி வைத்து அழுதார். இந்த காட்சி பார்ப்போரின் இதயத்தை உலுக்கியது. செய்தியாளர்கள் 100 பேருக்கும் மேற்பட்டோர் தங்கர் பச்சானை சூழ்ந்து கொண்டு, "இளவரசன் சாவுக்கு யார் காரணம்?"என்று கேட்டனர். தேம்பி தேம்பி அழுதபடியே செய்தியாளர்களிடம் பேசிய தங்கர், "இந்த தம்பி திவ்யாவ கூட்டிட்டு ஓடிய பிறகு அவனுக்கு தங்குவதற்கு கூட யாரும் அடைக்கலம் கொடுக்கல. தலித் மக்களுக்காக பாடுபடுறேன்னு சொல்ற தலைவர்கள் கூட அடைக்கலம் கொடுக்கல. நான் தான் ரெண்டு பேருக்கும் அடைக்கலம் கொடுத்து சோறுபோட்டேன். இந்தக் கொடுமையை செய்தது ராமதாசும் காடுவெட்டி குருவும் தான். இவர்களை கைது செய்யாவிட்டால் நான் மனித வெடிகுண்டாக மாறி தைலாபுரத்தில் விழுவேன். ஏங்க காதலிப்பது தப்பாங்க, இதுக்கு போய் இப்படி கொலை செய்வாங்களா? நான் கூட 'அழகி' படம் எடுத்தேன் அதுல தெரு ஓரத்துல வாழும் கீழ் சாதி பொண்ணை மேல் சாதி பையன் காதலிக்கிற மாதரிதான் படம் எடுத்தேன். அப்ப என்ன கொல்லு வாங்களா? ஒன்பது ரூபாய் நோட்டு படத்துல கூட தலித்துகளுக்கு ஆதரவா தான் படம் எடுத்தேன் " என்று கொதித்து போன தங்கர் பச்சானிடம் ஒரு செய்தியாளர் இடை மறித்து, "உங்களின் 'ஒன்பது ரூபாய் நோட்டு' மாதவன் படையாட்சி வரலாறுதானே ? நீங்க மாத்தி சொல்றீங்க" என்று கேட்டதும், "இந்த சென்ஸார் கமிட்டி செய்த சதி. நான் மாதவன் பறையருன்னுதான் எடுத்தேன் அவனுங்க மாத்திட்டாங்க. நான் சும்மாவிடப் போவதில்லை" என்று பேசிகொண்டே இருக்கும் போதே செய்தியாளர்கள் ஒவ்வொருவராக கிளம்பிப் போய்விட்டார்கள்.
தற்போது அம்பேத்கரின் புத்தங்கள் முழுவதும் கரைத்து குடித்துவிட்டார். இப்போது அம்பேத்கர் வழியில் ஊர் ஊராய் அம்பேத்கர் கொள்கைகளை விளக்குவதற்காக நடைபயணம் மேற்கொண்டிருக்கும் தங்கர் பச்சானை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
கேள்வி: ஏன் திடீரென அம்பேத்கர் மேல் பாசம்?
தங்கர்: இங்க அம்பேத்கர்ப் பத்தி யாருக்குமே தெரியல. அவர தமிழ் நாட்டுல அறிமுகப்படுத்துனதே நான் தான். அவரப்பத்தி நான் ஒரு படம் எடுக்க போரேன்.
கேள்வி: முன்பு ராமதாஸ் கூட அம்பேத்கர் மீது பாசம் உள்ளது போல் நடித்தார். ஊர் ஊராய் சிலை வைத்தார். அதைப் போல தான் இந்த அம்பேத்கர் பாசமா?
தங்கர்: (முகத்தை கோபமாக வைத்து கொண்டு) நான் கறுப்பா இருக்கேன் இது போதாதா? என்ன நம்புறதுக்கு?
கேள்வி: நீங்க எடுத்த படங்களில் ஒன்றாவது சமூக அக்கறையுள்ள படம் இருக்கா?
தங்கர்: ஏங்க ஏங்க என்னங்க இப்படி கேட்டுட்டீங்க ? எல்ல படங்களுமே அப்படித்தாங்க எடுத்திருக்கேன்.பாருங்க என்கிட்ட இனி சினிமாவ பத்தி கேட்காதிங்க.
கேள்வி: அப்ப என்ன தான் கேட்கிறது?
தங்கர்: எனக்கு ஒரு பயலும் தயாரிப்பாளரா சிக்க மாட்டுறான். அந்த வெறில தான் அம்பேத்கருனு அது இதுன்னு உளறுரேன் மன்னிச்சுக்கோங்க.
செய்தியாளர்கள் கோபத்துடன், "இவனுக்கு ஆள் கிடைக்கலனா.. நாம என்ன பன்றது ? இவன எல்லாம் கீழ்பாக்கத்துக்கு தான் அனுப்பனும்". புலம்பிகிட்டே வெளியேற தங்கர் பச்சானோ திடீரென பல்டி அடித்தவராக,
"இந்த நாட்டுல ஒரு பயலுக்கும் அறிவில்லைங்க. நான் தான் எல்லாத்தையும் சொல்லித்தர வேண்டி இருக்கு அடுத்தப் படம் எம்.ஜி.ஆர் பத்தி எடுக்கப்போறேன். யாருக்கும் தெரியாத விசயத்த படமா எடுக்கப்போறேன்" என்று அறிவித்ததும் எல்லோரும் துண்டக்காணோம் துனியகாணோம் என்று ஓட ஆரம்பிக்கிறார்கள். யாராவது படம் எடுக்க விரும்புவோர் தங்கர் பச்சானை தயவு செய்து தொடர்புகொள்ளுங்கள். பாவம் பிழைத்து போகட்டும்.
கடந்த ஆண்டு தருமபுரி நத்தம் சேரி சூறையாடப்பட்டதை அறிந்தவுடன் பதற்றத்துடன் முதலில் ஓடிப்போய் அந்த மக்களை சந்தித்து ஆறுதல் சொன்னதோடு பல உதவிகளை செய்தார். "இக்கொடுமைகளை செய்தது பா.ம.க தான். தூண்டிவிட்ட ராமதாசை கைது செய்யகோரி தைலாபுரத்தை லட்சக்கணக்கான மக்களோடு முற்றுகையிடப் போகிறேன்" என்று செய்தியாளர்களிடம் மிகத் துணிச்சலாக அறிவித்தார். இந்த அறிவிப்பை கேட்டு காவல்துறை மிரண்டு போய், "உங்களால் தமிழகதில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகக் கூடாது" என்று காலில் விழுந்து கெஞ்சியதால் அப் போராட்டத்தை கைவிட்டு விட்டார்.
இந்த நிலையில் திடீரென இளவரசன் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்த தங்கர் பச்சான், இளவரன் உடல் கிடந்த ரயில் இருப்பு பாதைக்கே சென்று ஒப்பாரி வைத்து அழுதார். இந்த காட்சி பார்ப்போரின் இதயத்தை உலுக்கியது. செய்தியாளர்கள் 100 பேருக்கும் மேற்பட்டோர் தங்கர் பச்சானை சூழ்ந்து கொண்டு, "இளவரசன் சாவுக்கு யார் காரணம்?"என்று கேட்டனர். தேம்பி தேம்பி அழுதபடியே செய்தியாளர்களிடம் பேசிய தங்கர், "இந்த தம்பி திவ்யாவ கூட்டிட்டு ஓடிய பிறகு அவனுக்கு தங்குவதற்கு கூட யாரும் அடைக்கலம் கொடுக்கல. தலித் மக்களுக்காக பாடுபடுறேன்னு சொல்ற தலைவர்கள் கூட அடைக்கலம் கொடுக்கல. நான் தான் ரெண்டு பேருக்கும் அடைக்கலம் கொடுத்து சோறுபோட்டேன். இந்தக் கொடுமையை செய்தது ராமதாசும் காடுவெட்டி குருவும் தான். இவர்களை கைது செய்யாவிட்டால் நான் மனித வெடிகுண்டாக மாறி தைலாபுரத்தில் விழுவேன். ஏங்க காதலிப்பது தப்பாங்க, இதுக்கு போய் இப்படி கொலை செய்வாங்களா? நான் கூட 'அழகி' படம் எடுத்தேன் அதுல தெரு ஓரத்துல வாழும் கீழ் சாதி பொண்ணை மேல் சாதி பையன் காதலிக்கிற மாதரிதான் படம் எடுத்தேன். அப்ப என்ன கொல்லு வாங்களா? ஒன்பது ரூபாய் நோட்டு படத்துல கூட தலித்துகளுக்கு ஆதரவா தான் படம் எடுத்தேன் " என்று கொதித்து போன தங்கர் பச்சானிடம் ஒரு செய்தியாளர் இடை மறித்து, "உங்களின் 'ஒன்பது ரூபாய் நோட்டு' மாதவன் படையாட்சி வரலாறுதானே ? நீங்க மாத்தி சொல்றீங்க" என்று கேட்டதும், "இந்த சென்ஸார் கமிட்டி செய்த சதி. நான் மாதவன் பறையருன்னுதான் எடுத்தேன் அவனுங்க மாத்திட்டாங்க. நான் சும்மாவிடப் போவதில்லை" என்று பேசிகொண்டே இருக்கும் போதே செய்தியாளர்கள் ஒவ்வொருவராக கிளம்பிப் போய்விட்டார்கள்.
இப்படி இளவரசன் படுகொலையிலும் துணிச்சலாக தமது கருத்தை சொல்லி போராடியவர்தான் தங்கர் பச்சான்.
தற்போது அம்பேத்கரின் புத்தங்கள் முழுவதும் கரைத்து குடித்துவிட்டார். இப்போது அம்பேத்கர் வழியில் ஊர் ஊராய் அம்பேத்கர் கொள்கைகளை விளக்குவதற்காக நடைபயணம் மேற்கொண்டிருக்கும் தங்கர் பச்சானை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
கேள்வி: ஏன் திடீரென அம்பேத்கர் மேல் பாசம்?
தங்கர்: இங்க அம்பேத்கர்ப் பத்தி யாருக்குமே தெரியல. அவர தமிழ் நாட்டுல அறிமுகப்படுத்துனதே நான் தான். அவரப்பத்தி நான் ஒரு படம் எடுக்க போரேன்.
கேள்வி: முன்பு ராமதாஸ் கூட அம்பேத்கர் மீது பாசம் உள்ளது போல் நடித்தார். ஊர் ஊராய் சிலை வைத்தார். அதைப் போல தான் இந்த அம்பேத்கர் பாசமா?
தங்கர்: (முகத்தை கோபமாக வைத்து கொண்டு) நான் கறுப்பா இருக்கேன் இது போதாதா? என்ன நம்புறதுக்கு?
கேள்வி: நீங்க எடுத்த படங்களில் ஒன்றாவது சமூக அக்கறையுள்ள படம் இருக்கா?
தங்கர்: ஏங்க ஏங்க என்னங்க இப்படி கேட்டுட்டீங்க ? எல்ல படங்களுமே அப்படித்தாங்க எடுத்திருக்கேன்.பாருங்க என்கிட்ட இனி சினிமாவ பத்தி கேட்காதிங்க.
கேள்வி: அப்ப என்ன தான் கேட்கிறது?
தங்கர்: எனக்கு ஒரு பயலும் தயாரிப்பாளரா சிக்க மாட்டுறான். அந்த வெறில தான் அம்பேத்கருனு அது இதுன்னு உளறுரேன் மன்னிச்சுக்கோங்க.
செய்தியாளர்கள் கோபத்துடன், "இவனுக்கு ஆள் கிடைக்கலனா.. நாம என்ன பன்றது ? இவன எல்லாம் கீழ்பாக்கத்துக்கு தான் அனுப்பனும்". புலம்பிகிட்டே வெளியேற தங்கர் பச்சானோ திடீரென பல்டி அடித்தவராக,
"இந்த நாட்டுல ஒரு பயலுக்கும் அறிவில்லைங்க. நான் தான் எல்லாத்தையும் சொல்லித்தர வேண்டி இருக்கு அடுத்தப் படம் எம்.ஜி.ஆர் பத்தி எடுக்கப்போறேன். யாருக்கும் தெரியாத விசயத்த படமா எடுக்கப்போறேன்" என்று அறிவித்ததும் எல்லோரும் துண்டக்காணோம் துனியகாணோம் என்று ஓட ஆரம்பிக்கிறார்கள். யாராவது படம் எடுக்க விரும்புவோர் தங்கர் பச்சானை தயவு செய்து தொடர்புகொள்ளுங்கள். பாவம் பிழைத்து போகட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment