31 July 2011
தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி இராஜபக்சே கும்பலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தமிழ்நாடெங்கும் 15 லட்சம் பேரிடம் கையயாப்பம் பெற்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மூலம் அய்.நா. அவைக்கு அனுப்பும் கையயாப்ப இயக்கத்தினை கடந்த சூலை 12 அன்று சென்னை, பத்திரிகையாளர் மன்றத்தில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தொடங்கிவைத்தார். இனப்படுகொலைக் குற்றவாளிகளுக்கு எதிரான விடுதலைச் சிறுத்தைகள் மூட்டிய இந்தத் தீ தமிழ்நாடெங்கும் மீண்டும் காட்டுத் தீயாய்ப் பரவிக்கொண்டிருக்கிறது.
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள், இயக்கப் பணிகள், இயக்கத் தோழர்களின் இல்ல நிகழ்ச்சிகள், சமச்சீர்க் கல்விக்கான ஆர்ப்பாட்டங்கள், நாடாளுமன்ற நடவடிக்கைகள் என்கிற தமது அன்றாடப் பணிகளுக்கிடையே நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்னை இலயோலா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, உயர்நீதிமன்ற வளாகம், கடைவீதிகள், இரயில் நிலைங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என எங்கெங்கு சென்றாலும் அங்கெல்லாம் கையயாப்பம் பெற்று இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்பது குறித்து மக்களிடையே விளக்கிப் பேசிவருகிறார். தலைவர் சூறாவளியாய்ச் சுற்றிக்கொண்டிருக்க தொண்டர்களும் அவரவர் வலிமைக்கேற்ப மாவட்டங்களில் கையயாப்ப இயக்கத்தினைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் பள்ளி, கல்லூரி வாயில்கள், திரையரங்கு வாயில்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் கையயாப்பம் பெறும் நடவடிக்கைகள் கடந்த 25Š7Š2011 அன்று மேற்கொள்ளப்பட்டது. செய்தித் தொடர்பாளராகிய நான் (வன்னிஅரசு), தலைவரின் தனிச்செயலாளர்கள் தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், ஊடக மையத்தின் மாநிலத் துணைச் செயலாளர் எழில் இமயன், மாவட்டத் துணைச் செயலாளர் விடுதலைச்செல்வன், மாவட்டச் செய்தித் தொடர்பாளர் செந்தில்குமார் ஆகியோர் கையயாப்பம் பெற்றுக்கொண்டிருந்தோம். திரைப்படக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள் போன்ற பிரபலங்களிடம் கையயாப்பம் பெற்றால் செய்தி வெகுமக்களிடம் சென்றடையும் என்ற எண்ணத்தில் இனமானமுள்ள மரியாதைக்குரிய திரைக்கலைஞர்கள் சிலரை அணுகினோம். இயக்குநர் மணிவண்ணன், நடிகர் சத்யராஜ், ஆர்.கே. செல்வமணி, ரோஜா, விஜய டி. ராஜேந்தர், மு. களஞ்சியம். மனோஜ் பாரதிராஜா, கவிஞர் அறிவுமதி, கவிஞர் சல்மா ஆகியோரிடம் கையயாப்பம் பெற்றோம்.
நடிகர் விஜய் திருவல்லிக்கேணியில் உள்ள பல்கலைக்கழகக் கட்டடத்தில் படப்பிடிப்பில் இருப்பதாக அறிந்தோம். "த்ரீ இடியட்ஸ்' என்கிற இந்திப் படத்தின் தமிழாக்கமாக ங்கரின் இயக்கத்தில் உருவாகும் "நண்பன்' படத்தின் படப்பிடிப்பில்தான் விஜய் இருந்தார் ("ஜெண்டில்மேன்' முதல் "எந்திரன்' வரை ங்கருக்கு எல்லாமே திருட்டுக் கதைதான். சொந்தக் கதை என்பதே இருக்காது போலும்!) படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைந்து கையயாப்பம் பெறுவது குறித்து விளக்கினோம். மேலாளர் சரவணன் என்பவரிடம் அழைத்துச் சென்றார்கள். அவரோ விமல் என்கிற நிர்வாக மேலாளரிடம் பேசச் சொன்னார். பேசினோம். பேசுவதற்கே ஒரு மணி நேரமாகிவிட்டது. மீண்டும் மேலாளர் சரவணன் வந்தார். கையயாப்பப் படிவங்களை வாங்கிக்கொண்டு விஜயிடம் சென்றார்; திரும்பி வந்தார். இப்படியாக மணிக்கணக்கில் நேரத்தைக் கழித்துவிட்டு, விஜய்க்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டதாகச் சொன்னார்.
ஆனால் நாம் விடவில்லை. ஏனென்றால் நடிகர் விஜய் தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த சிங்கள இனவெறியர்களைக் கண்டித்து நாகப்பட்டிணத்தில் உண்ணாவிரதமெல்லாம் இருந்தார். ஆகவே அவரும் இனவுணர்வாளராகத்தான் இருப்பார் என்கிற நம்பிக்கையில்தான் சென்றோம். அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் அவர்களைக்கூட இனவுணர்வாளராகத்தான் கடந்த காலங்களில் அறிந்திருந்தோம். ஆகவே விஜய் கையயாப்பமிட மறுத்துவிட்டார் என்று மேலாளர் சரவணன் சொல்வது பொய்யாகக் கூட இருக்கலாம் என்று நினைத்து, ""விஜய்யைப் பார்த்துக் கேட்டுவிட்டுச் செல்கிறோம்'' என்றோம். அதற்கு மேலாளர் சரவணன், ""விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரிடம் பேசுங்கள்!'' என்று அவருடைய செல்பேசி எண்ணைக் (9841375250) கொடுத்தார். நான் அவரிடம் பேசினேன். எடுத்தவர் அவரது உதவியாளர் என்று சொன்னார். நான் விவரத்தைச் சொன்னவுடன் எஸ்.ஏ.சியிடம் கைபேசி சென்றது. உடன் நான், ""சார், நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு பேசுகிறேன். இராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்காக கட்சியின் சார்பில் கையயாப்பம் பெற வந்திருக்கிறோம்!'' என்று சொன்னதுமே அவர், ""சார் உங்களைப் போலத்தான் நானும் ஒரு இயக்கம் நடத்துகிறேன் (விசிலடிச்சான் குஞ்சுகளை வைத்திருப்பது ஒரு இயக்கமாம்!) படப்பிடிப்புத் தளத்தில் நிக்காதீங்க! விஜய் கையயழுத்துப் போடாது! நீங்க போகலாம், அங்க தொந்தரவு செய்யாதீங்க!'' என்றார். நானோ விடாமல், ""சார் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஆதரவு கேட்டுத்தான் கையயாப்பம் வாங்குகிறோம். வேறு ஒன்றும் பயப்படுவதற்கில்லை!'' என்றேன். அதற்கு சந்திரசேகர், ""கையயழுத்துப் போட முடியாது. நீங்கள இடத்தக் காலி பண்ணுங்க!'' என்றார் கோபமாக. செல்பேசியும் துண்டிக்கப்பட்டது. விஜய் போடவில்லையயன்றாலும் படப்பிடிப்புத் தளத்தில் உள்ள மற்ற நடிகர், நடிகைகளிடம் வாங்கலாம் என்று உடனிருந்த கட்சி நிர்வாகிகள் தகடூர் தமிழ்ச்செல்வனும், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வனும் சொன்னதன் பேரில், மற்றவர்களை அணுக முயன்றபோது அதற்கும் படப்பிடிப்புக் குழுவினர் ஒப்புக்கொள்ளவில்லை. அங்கிருந்த தனியார் பாதுகாவலர்கள் எங்களை அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். நாங்கள் உடனடியாக அந்த இடத்தை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்தோம். அதனையும் தடுக்க முயன்றார்கள். அதனை மீறி படங்களை எடுத்துவிட்டு வந்தோம்.
இராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஆதரவாக ஒரு கையயாப்பம்கூடப் போடாமல் அதனை ஒரு பிரச்சனையாக ஆக்கியுள்ளனர் நடிகர் விஜய்யும் அவரது தந்தையும். தொடர்ச்சியாகத் தன்னை தமிழின உணர்வாளராகக் காட்டிக்கொண்ட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், கலைஞரது தமிழால்தான் வளர்ந்தேன் என்று அடிக்கடி மார்தட்டிக் கொள்வார். தனது மகன் நடித்த "சிவகாசி', "வேட்டைக்காரன்', "சுறா', "குருவி' போன்ற படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்த பிறகும் வெற்றிப் படங்களைப் போல் வெளியில் பில்ட்Šஅப் செய்தார். தியேட்டர்களில் படங்கள் தோல்வியடைந்ததால் நஷ்ட ஈடு கேட்டு விநியோகஸ்தர்கள் விஜய் வீட்டை முற்றுகையிட்டனர். அந்த ரகத்தில் "காவலன்' படமும் ரிலீஸ் செய்யப்பட முடியாமல் திணறியது. விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈட்டுப் பணத்தைக் கொடுத்தால்தான் திரையிடுவோம் என்று சொன்னதால்தான் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. ஆனால் அதை அரசியல் பிரச்சனையாக மாற்றினார் "புரட்சி இயக்குநர்' சந்திரசேகர். நேராக போயஸ் தோட்டம் சென்றால். ஜெயலலிதா காலில் விழுந்தார்; கதறினார். ஒரு சில தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆனது. அதோடு "காவலன்' வீட்டுக்குப் போனார்.
இந்நிலையில் ஆட்சி மாற்றம் வந்ததும், எங்களால்தான் ஆட்சி மாற்றம் வந்தது என்று அறிக்கை விட்டார். அது மட்டுமல்ல, அம்மாவிடம் எனக்கு செல்வாக்கு இருக்கிறது என்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை மிரட்டி அவரே தலைவராகவும் அறிவித்துக்கொண்டார் (இவருக்குப் பெயர்தான் புரட்சி இயக்குநர்!). இந்நிலையில் வன்முறை, ஆபாசம் உள்ள படங்களுக்கு தமிழில் பெயர் வைத்திருந்தாலும் வரி விலக்கு இல்லை என்று தமிழக அரசு திடீரென அறிவித்த மறுநாளே தனது மகன் நடிக்கும் படத்திற்கு "யோஹன் Š அத்தியாயம் 1' என்று வடமொழியில் பெயரிடப்பட்டுள்ளது. பொதுவாக விஜய் படம் என்றாலே ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள், வன்முறைதான் தூக்கலாக இருக்கும். பாடலும் அதே ரகம்தான். உதாரணம்: தொட்டபெட்டா ரோட்டுல முட்டை புரோட்டா (பாடியவர்கள்: விஜய் மற்றும் அவரது அம்மா ஷோபா). எந்தத் தமிழ் உணர்வையும் பற்றிக் கவலைப்படாமல்தான் அடுத்த படத்தை அறிவித்திருக்கிறார்.
அப்பனும் மகனும் சேர்ந்து ஏதோ புரட்சி செய்கிற புரட்சிக்காரர்கள் மாதிரியும், தமிழ்நாட்டையே புரட்டிப் போடுவது மாதிரியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். விஜய்யின் எந்தப் படமாவது சமூக அக்கறையோடு வந்திருக்கிறதா? தமிழர்களின் பண்பாட்டைத்தான் சித்தரிக்கிறதா? எதுவுமே இல்லை. எந்தப் படம் பார்த்தாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். நடிகர் விஜய்யை தமிழகக் காங்கிரஸின் தலைவராக்க அவரது தந்தையார் எடுத்த முயற்சி புலம்பெயர்ந்த தமிழர்களின் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டது. ஆனாலும் அப்பனும் மகனும் சேர்ந்து தமிழர்களை ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்படுகிறார்கள். ஏனென்றால் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் முதல்வராகவும், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் இந்தக் கேவலமான நிலையில் விஜய்யும் தமிழக முதல்வராகும் கனவில் மிதக்கிறார். தனது பிழைப்பிற்காக இராஜபக்சே தமிழ்நாட்டில் திரைப்படம் தயாரித்தால்கூட நடிக்கத் தயங்காத கலைக்குடும்பம்தான் எஸ்.ஏ.சந்திரசேகரின் குடும்பம் என்பதை, எப்போதுமே சினிமா மாயையில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் போலல்லாமல், புலம்பெயர்ந்த தமிழர்களாவது புரிந்துகொள்ள வேண்டும்.
: : :
இப்போது அரசியல் பக்கம் வருவோம். புதுதில்லி ஜந்தர் மந்தரில் கடந்த 28Š7Š2011 அன்று இராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வலியுறுத்தி உலகத் தமிழ்ச் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. பெருங்கவிக்கோ வ.மு. சேதுராமன் தலைமையில் நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் முடித்து வைத்து நிறைவுரையாற்றினார். இதற்கிடையே பட்டினிப் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகிலேயே தலித் கிறித்தவர்கள், தலித் முஸ்லிம்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி மூன்று நாட்களாக போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டங்களிலும் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அங்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் தோழர் டி. இராஜா அவர்களிடம் கையயாப்பப் படிவங்களைக் கொடுத்துக் கையயாப்பம் கேட்டோம். ஆனால் அவர் எங்களுக்கு இதில் முரண்பாடு உண்டு என்று கையயாப்பமிட மறுத்து விட்டார். ஓர் இனவிடுதலைக்காகப் போராடும் முதல் உணர்வான இராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான ஆதரவுக் கையயாப்பமிடக் கூட கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தரவில்லையயன்றால் எதற்குத்தான் ஆதரவு தருவார்கள்? அல்லது இராஜபக்சே செய்தது சரிதான் என்கிறார்களா? அல்லது இலங்கையை சீனாவும், ரஷ்யாவும் ஆதரிப்பதால் இந்த நிலைப்பாடா? தளபதி கதை அப்படியயன்றால் ராஜா கதை இப்படி.
இதேபோல்தான் தலித் சேனா தலைவரும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களிடம் கையயாப்பப் படிவத்தை நீட்டினோம். அவரும் மறுத்து விட்டார். தலித்துகளின் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் ஆதிக்கவாதிகளின் ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடும் ராம்விலாஸ் பாஸ்வான் இலங்கையில் சிங்கள ஒடுக்குமுறைகளுக்கெதிராகப் போராடும் தமிழர்களையும் ஆதரிப்பதுதானே சரியாக இருக்கும். ஒடுக்குமுறை தலித்துகளுக்கு வந்தால்தான் குரல்கொடுப்பாரோ?
எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் போன்ற அரசியல் புரிதல் இல்லாத திரையுலகத்தினர் கையயாப்பமிட மறுத்ததில் நமக்கு வருத்தமெதுவுமில்லை. ஆனால் இலங்கைத் தமிழர் உரிமை என்று நாடாளுமன்றத்திலும் வெளியிலும் வாய்கிழியப் பேசும் கம்யூனிஸ்ட் தலைவர்கூட கையயாப்பமிடாதது அவர்களின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது.
கையயாப்பம் போடாவிட்டாலும் பரவாயில்லை, ஈழத் தமிழர்களின் வரலாறையாவது தெரிந்துகொள்ளுங்கள் தலைவர்களே, அப்புறம் போராடலாம்!.
இவண்
வன்னிஅரசு
வன்னிஅரசு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment