20 August 2011
மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு சென்னையில் 20.08.2011 அன்று தொடர் முழக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரை காப்பாற்றுங்கள் என்ற வாசகம் அடங்கிய பனியனை அளிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தை கட்சி வன்னி அரசு, பெரியார் திராவிடர் கழகம் கொளத்தூர் மணி ஆகியோர் தலைமை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த பல்வேறு கட்சி, இயக்கங்களை சேர்ந்தவர்கள் தங்கள் கொடி உள்ளிட்ட அடையாளங்களை எடுத்து வரவில்லை. மூன்று பேரை காப்பாற்ற முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கும் வாசகங்களை கைகளில் வைத்திருந்தனர்.
விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் மடிப்பாக்கம் வெற்றிசெலவன், இளஞ்சேகுவேரா, சங்கத்தமிழன், செந்தில் உள்ளிட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment