27 August 2011
பேரறிவாளன், சாந்தன், முருகன்
மரண தண்டனையை நீக்க வலியுறுத்தி
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில்
மரண தண்டனை ஒழிப்பு மாநாடு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தண்டனையை நீக்கி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், இந்திய அரசு ஒட்டுமொத்தமாக மரண தண்டனைக் கொள்கையைக் கைவிட வலியுறுத்தியும் சென்னை மறைமலைநகரில் நாளை (28Š8Š2011) ஞாயிறு மாலை 5 மணியளவில் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டிற்கு பா.ம.க. தலைவர் கோ.க. மணி தலைமை வகிக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் அ.கி. மூர்த்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் துரை. ரவிக்குமார் முன்னிலை வகிக்கின்றனர். திருக்கச்சூர் ஆறுமுகம், சூ.க. விடுதலைச்செழியன் ஆகியோர் வரவேற்புரையாற்றுகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கவிஞர் அறிவுமதி ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர். கே.தென்னவன் நன்றி கூறுகிறார். முன்னதாக மாலை 4 மணியளவில் தேனிசை செல்லப்பாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாநாட்டில் மனித உரிமை ஆர்வலர்களும் அறிஞர் பெருமக்களும் கலந்துகொள்கின்றனர்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்ற செப்டம்பர் 9ஆம் தேதி என்று நாள் குறித்துள்ள சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் இணைந்து ஒருங்கிணைத்துள்ள இம்மாநாட்டின் முக்கியத்துவம் கருதி மனித உரிமை ஆர்வலர்களும் பொதுமக்களும் கட்சி வேறுபாடின்றி திரளாகக் கலந்துகொண்டு மரண தண்டனைக்கு எதிரான நமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று மருத்துவர் இராமதாசு, தொல். திருமாவளவன் இருவரும் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவண்
வன்னிஅரசு
.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment