12 August 2011
இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்களோடும், தலித் மக்களை சிறுமைப்படுத்தும் காட்சிகளோடும் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஆராக்ஷன்’ திரைப்படத்துக்கு உத்திரப்பிரதேசம், பீகார், ஆந்திரப் பிரதேசம் ஆகிய அரசுகள் தடைவிதித்துள்ளன. தமிழ்நாட்டிலும் இத் திரைப்படத்துக்கு தடைவிதிக்கக்கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பாக இன்று காலை 12-8-2011 கலை 10 மணியளவில் சென்னை சத்யம் திரையரங்கம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாநில செய்தித்தொடர்பாளர் வன்னிஅரசு தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், சைதை எஸ்.எஸ்.பாலாஜி, ஆ. விடுதலைச்செல்வன், சாரநாத், பகலவன், குமரப்பா உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இவண்,
( வன்னிஅரசு )
சத்யம் & ஐநாக்ஸ் திரையரங்கம் முன் ஆர்பாரட்டம் செய்த போது
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment